ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் காரின் முன்பதிவு துவங்கியுள்ளது
எஸ்.யூ.வி ரக கார்களில் சிறந்த கார்களின் ஒன்றான புதிய அம்சங்களுடன் கூடிய ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக்கிற்கான முன் பதிவு துவங்கியுள்ளது.
எஸ்.யூ.வி ரக கார்களில் சிறந்த கார்களின் ஒன்றான புதிய அம்சங்களுடன் கூடிய ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக்கிற்கான முன் பதிவு துவங்கியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜீப் டீலர் டிரைவ் ஸ்பாக்கிற்கு அளித்த தகவலின் படி ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக்கிற்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் விலை குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரூ 50, ஆயிரம் முன்பணத்துடன் முன் பதிவுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த கார் வரும் ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிகளில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

தற்போது மஹாராஷ்டிரா ரன்ஜன்கானில் உள்ள எப்.சி.ஏ., நிறுவனத்தின் தொழிற்சாலையில் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாள குளேபல் வெரியண்ட்டில் உள்ள அதே அம்சங்களே டாப் வெரியண்டிலும் அமைந்திருக்கிறது.

எஸ்.யூ.வி மாடல் கார்களுக்கான சராசரி உயரத்தில் விட 20.மி.மீ உயரம் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. காரின் சிறந்த செயல்பாட்டிற்காக முன்புறமும், பின்புறமும் உள்ள பம்பர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக களம் இறங்கவுள்ள இந்த காரில் 2 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 171 பி.எச்.பி., 350 என்.எம்., டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடையதாகவுள்ளது.
Recommended Video


புதிய அலாய் வீல்கள், கருப்பு, சில்வர் நிற டுயல் டோன் பெயிண்டிங், முன்புற பம்பர் அருகே ரிக்கவரி ஹூக், கருப்பு நிற டீக்கலுடன் கூடிய பானட், அனைத்து வானிலைக்கு ஏற்ற ஸ்கிட் பிளேட் என பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த காம்பஸ் டிரையல்ஹாக்

எஸ்.யூ.வி வகை கார்களில் டாப் வெரியண்ட்டில் உள்ள ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக்கின் புதிய வசதிகளை வைத்து கணக்கிடும் போது எக்ஸ் -ஷோரூம் விலை ரூ 24 லட்சம் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








