ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகை!!

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்த விரிவான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் வழங்குகிறது.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் சேமிப்பு சலுகை - விபரம்!

ஃபியட் க்றைஸ்லர் குழுமம் ஜீப் 4X4 என்ற சிறப்பு நிகழ்வை உலக அளவில் கொண்டாடி வருகிறது. நேற்று துவங்கிய இந்த நிகழ்வு வரும் 30ந் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தருணத்தில் வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை ஜீப் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் சேமிப்பு சலுகை - விபரம்!

இந்த ஆண்டு இந்தியாவில் ஜீப் 4X4 நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு விசேஷமான பயண திட்டங்கள் மற்றும் ஆஃப்ரோடு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் சேமிப்பு சலுகை - விபரம்!

இது ஒருபக்கம் இருக்க, ஜீப் 4X4 நிகழ்வின் ஒரு பகுதியாக ஜீப் காம்பஸ் எஸ்யூவியை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகையை ஜீப் நிறுவனம் வழங்குகிறது. ஏற்கனவே முன்பபதிவு செய்த வாடிக்கையாளர்கள் மற்றும் புதிதாக முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த சலுகையை பெற முடியும்.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் சேமிப்பு சலுகை - விபரம்!

இதன்படி, ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் மாடலை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ரூ.50,000 மட்டும் கூடுதலாக செலுத்தி 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டாப் வேரியண்ட் மாடலுக்கு முன்பதிவை மாற்றிக் கொள்ளலாம்.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் சேமிப்பு சலுகை - விபரம்!

அதாவது, ஜீப் காம்பஸ் 2 வீல் டிரைவ் மாடல் ரூ.19.21 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், 4 வீல் டிரைவ் மாடல் ரூ.21.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.50,000 மட்டும் கூடுதலாக செலுத்தி 4 வீல் டிரைவ் மாடலை பெற வாய்ப்பு இருப்பதால் ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் சேமிப்பு சலுகை - விபரம்!

புதிதாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் 4X4 மாடலை முன்பதிவு செய்யும்போது அதே ரூ.1.50 லட்சம் வரையிலான சேமிப்பை பெற முடியும். வரும் 30ந் தேதி வரை மட்டுமே இந்த சேமிப்புச் சலுகையை பெற முடியும்.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் சேமிப்பு சலுகை - விபரம்!

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் லிமிடேட் என்ற டாப் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் சேமிப்பு சலுகை - விபரம்!

இந்த சிறப்புச் சலுகை நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வை வழங்கும். மேலும், ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கான முன்பதிவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 5, 2018, 11:04 [IST]
English summary
Fiat Chrysler Automobiles (FCA) is celebrating the Jeep 4X4 month from the 4th - 30th April 2018. As part of the global celebrations, Jeep India is offering all its customers who are planning to book or have already booked the Compass 4X2 variant, an option of paying Rs 50,000 extra and upgrading to the 4X4 variant of the Compass.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+