ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து, இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரி

By Saravana Rajan

ஜீப் ரெனிகேட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது ஜீப் நிறுவனம். மேலும், ரூ.10 லட்சத்திற்குள் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ஜீப் நிறுவனம் அடுத்தது இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

ஒன்று ரெனிகேட் எஸ்யூவி என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி ரூ.13 லட்சம் விலையில், ஜீப் காம்பஸ் காரைவிட சற்று விலை குறைவாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட இருக்கிறது.

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

ரூ.10 லட்சத்திற்குள் வர இருக்கும் புதிய ஜீப் எஸ்யூவி மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாகவும், ஆனால், சற்றே பிரிமியம் மாடலாக இருக்கும். இதனால்,இந்த செக்மென்ட்டில் அதிக விலை கொண்ட மாடலாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

இந்த இரண்டு எஸ்யூவிகளுக்கும் இந்திய சப்ளையர்களிடமிருந்து அதிக அளவில் உதிரிபாகங்களை பயன்படுத்த ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், விலையும் மிக சவாலாக இருக்கும். அதேநேரத்தில், பிற மாடல்களைவிட எஸ்யூவி தயாரிப்பில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜீப் நிறுவனத்தின் பிரிமியம் பிராண்டு மதிப்பும் கூடுதல் மதிப்பாக இருக்கும்.

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

இந்த இரண்டு எஸ்யூவிகளும் இந்தியா மட்டுமின்றி, சீனா தவிர்த்த பிற ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிற மாடல்களிலிருந்து இந்த இரு மாடல்களின் வடிவமைப்பும் தனித்துவம் மிக்கதாக இருக்கும் என்பதால், எஸ்யூவி பிரியர்களை வெகுவாக கவரும்.

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள் ஜீப் ரெனிகேட் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், பவர் மற்றும் டார்க் திறன் சற்று குறைவாக இருக்கும்.

ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்!

ஜீப் ரெனிகேட் எஸ்யூவி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதே காலக்கட்டத்திற்குள் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவியையும் அறிமுகம் செய்ய ஜீப் கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 23, 2018, 18:31 [IST]
English summary
Jeep has officially confirmed that they will launch the Renegade SUV in India within next 2 years. They also working on a sub 4-meter compact SUV to compete with Maruti Suzuki Vitara Brezza, Tata Nexon and Ford EcoSport in India.
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+