AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

ரஷ்யாவை சேர்ந்த கலஷ்னிகோவ் நிறுவனம் தனது புதிய வகை KALASHNIKOV CV1 என்ற பெயரில் புதிய மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது. சொன்னால் நம்பமாட்டீர்கள் புகழ் பெற்ற AK 47 துப்பாக்கி இந்நிறுவனத்தின் படைப்பே.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

இந்த நிறுவனம் தான் ஒரு எலக்ட்ரிக் வாகனம் வெளியிடுவதாகவும் அதன் கோட்பாடுகள் இவ்வாறு இருக்கும் எனவும் வரையறுத்து அறிவித்துள்ளது. மேலும் இவை டெஸ்லா போன்ற முன்னோடி எலக்ட்ரிக் வாகனங்களை குறிவைத்து அமையும் என்றும் கூறுகின்றனர். இந்த தொழில்நுட்பம் உலகளவில் அதிகமாய் பேசப்படாததின் காரணம் இன்னுருவனத்தின் புகழின்மையே.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

ரஷ்ய ஆயுத தயாரிப்பாளர்களின் உன்னத படைப்பான ஆட்டோமேட்டிக் கலஷ்னிகோவ் 1947 என்ற ஆயுதத்தினை வெளியிட்டனர் . உலகெங்கும் இந்த AK47 ஆயுதம் இல்லாத ராணுவப்படையே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பெயர் போன செயல் திறன் கொண்டது இந்த துப்பாக்கி .

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

இதையே நாம் AK47 என்று அழைக்கிறோம். சரி ஆயுத தொழிலில் உள்ள இவர்கள் ஏன் சம்மந்தமே இல்லாமல் வாகன உலகில் மூக்கை நுழைக்கின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். மேலும் எலக்ட்ரிக் வாகனத்தை இவர்கள் அறிமுகம் செய்யப்போவது இது முதல் முறை அல்ல என்பது கூடுதல் ஆச்சர்யம்.

Most Read Article:ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்!

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

கலஷ்னிகோவ் நிறுவனம் தற்போது நடந்து முடிந்த 2018 உலக கோப்பை கால் பந்து போட்டியின் பொது ரஷ்யாவில் தனது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

இந்த வாகனத்தின் வரவேற்பினை சற்றும் எதிர் பாரத இன்னுருவனம் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டதோடு அடுத்த எலக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுவது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு மக்கள் கண்களை பிறர் பக்கம் செல்ல விடாமல் இழுத்து பிடித்தது.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

சரி தற்பொழுது எலக்ட்ரிக் கார் பக்கம் திரும்புவோம். வெளிர் நீல நிறத்தில் (EGGSHELL BLUE ) பழைய 1970 இல் வெளிவந்த ரஷியன் லிமோ போன்ற வாகனத்தை ஒத்து இருக்கின்றது இதன் தோற்றம். அங்கும் இங்கும் பலதரப்பட்ட வண்ணங்கள் பூசி வெறுப்பூட்டும் விதமாய் அல்லாது ஒரே நிறத்தில் வாகனம் முழுவதும் VINTAGE வாகனம் போன்று அமைந்து கண்ணை இமைக்க மறக்க செய்கிறது.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

IZH 2125 KOMBI என்ற பழைய வாகன தொழில்நுட்ப அடிப்படையில் இவ்வாகனம் அமைந்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை கண்டவுடன் யாராலும் இது HATCHBACK என்றும் SEDAN என்றும் கணிக்க முடியாது. இதன் உடல் அமைப்பு இரண்டிற்கும் இடைப்பட்டதாய் குழம்ப செய்யும்.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

வெள்ளை நிறம் கொண்ட MULTI SPOKE ALLOY - இனால் வீல்கள் மெருகேற்றபற்றுள்ளன. முன் மற்றும் பின் ஆர்ச்சுகள் வித்யாசமான முறையில் வெவ்வேறு வடிவங்களில் அமைந்தது அருமை. சலசலப்பு தன்மை இல்லாமல் பணக்கார பாணியில் அமைதியாக நம்பகத்தன்மையுடன் மிளிர்ந்து நிற்கிறது இந்த வாகனம். இதன் GROUND CLEARANCE பந்தய வாகனம் போல் மிகவும் குறைவாக உள்ளது.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

இந்த புதிய மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனம் தற்போது உள்ள வாகனத்தை போல் வெட்டி பந்தா இல்லாமல் ராயல் லுக்குடன் பளபளக்கிறது. வண்டியில் அமர்ந்து ஓட்டும் பொது தான் இந்த பறக்கும் செயல் திறனில் மிரண்டு போவீர்கள்.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

பின் பக்கத்திலிருந்து பார்க்கையில், இதற்கென்றே வடிவமைக்க பட்ட ( UNIQUE THREE BOX DESIGN ) தோற்றமானது தற்பொழுது சந்தையில் உள்ள வாகனத்திற்கு ஈடு கொடுப்பதாய் இல்லை என்பது உண்மை. மேலும் பின் பக்கம் மின் விளக்குகள் முற்றிலுமாய் உள்ளுர அமைந்து திருப்தியை குறைகின்றது.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

இதன் உடல் அமைப்பினை பூர்த்தி செய்யும் விதமாய் பின்பக்க மின் விளக்குகளுக்கு இடையே சார்ஜிங் போர்ட் அமையப்பெற்றிப்பது அழகு. ஆயினும் இவை வாகன உற்பத்தியில் ஈடுபடும் பொது இந்த போர்டுகள் அடைக்கபோடுமோ என்ற ஐயம் அனைவர் மனத்திலும் உள்ளது.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

செயல் திறன் மற்றும் வாகனத்தின் ட்ரான்ஸ்மிஷஸின் போன்றவற்றின் ரகசியங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை . இருப்பினும் இவை 90KWH பேட்டரி கொண்டு இயங்கலாம் எனவும், இதன் பயண தூரம் 350KM வரை ஒரு முறை சார்ஜ் செய்தல் செல்லும் என்றும் கிசுகிசுக்கபடுகிறது.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

மேலும் இவ்வாகனம் 100KM வேகத்தை ஆறே நொடிகளில் தொட்டுவிடும் என்பது மலைக்க வைக்கும் விஷயம். மனதில் கொள்ளுங்கள் இவை அனைத்தும் அதிகார பூர்வ தகவல்கள் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இதன் நம்பகத்தன்மையை .

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

பலதரப்பட்ட வாதங்களுக்கு பின் மொத்தமாக நோக்குகையில் இந்த கைலாஷினோவ் CV1 வாகனம் மிக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது என்கின்றனர் தானியங்கி வல்லுநர்கள். இந்நிறுவனம் இந்த வாகனமானது கண்டிப்பாக டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்களை குறிவைக்கும் என்றும் மென் மேலும் ஆணித்தமாக கூறுவது அவர்களது தைரியத்தை பாராட்டும் விதமாய் உள்ளது. இந்த வாகனம் தானியங்கி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று வினவப்படுகிறது.

AK47 துப்பாக்கி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

ரஷியன் கார்கள் பொதுவா வாகன சந்தையில் அதீத வெற்றி பறிப்பதில்லை என்றபோதும், இதன் செயல் திறன் அதீத பயன்பாடு மற்றும் டெஸ்லா வாகனத்தை குறிவைக்கும் கோட்பாட்டு போன்றவை சற்றே பயம்காட்டும் விதமாய் உள்ளது மற்ற நிறுவனங்களுக்கு. ஆகவே இந்த வாகனம் தனக்குரிய தனி பாணியில் வெற்றியை பறிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த காரின் எளிமைத்தன்மை மற்றும் பழைய தோற்றத்தினால் நெட்டிசன்கள் பலரால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டாலும்,இதன் எளிமையே இதன் வெற்றியை உறுதிப்படுத்தி அனைவர்க்கும் அதிர்வை குடுக்க வல்லது.

{document1}

Tamil
English summary
Kalashnikov CV-1 Unveiled: Famous Russian gun-maker, Kalashnikov has unveiled a new electric car concept – the CV-1. Showcased in a concept format, the Kalashnikov CV-1 is aimed to take on the likes of leading electric car manufacturers, including Tesla. But the CV-1 is not the reason why the world is interested to hear about the brand.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more