நடிகர் தர்ஷன் லம்போர்கினி சூப்பர் கார் மீது கண் வைத்த பெங்களூர் போக்குவரத்து துறை!

By Saravana Rajan
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

சாண்டல்வுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் தர்ஷன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கியிருக்கிறார். இந்த கார் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், பெங்களூர் போலீசார் இந்த காரை தங்களது கண்காணிப்பு பட்டியலில் சேர்த்துள்ளனர்.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

விலை உயர்ந்த கார்களை வாங்கும் தென் இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலர் புதுச்சேரியில் பதிவு செய்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர். இதனால், பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக அவ்வப்போது பரபரப்பு கிளம்புகிறது.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

கேரளாவை சேர்ந்த நடிகை அமலாபால் கூட அண்மையில் வாங்கிய சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்து கொச்சியில் வைத்து பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து, அவருக்கு கேரள போக்குவரத்துத் துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார். இதேபோன்று, பல மலையாள திரை உலகினர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

இந்த சூழலில், பெங்களூரில் வசிக்கும் நடிகர் தர்ஷன் செகண்ட் ஹேண்ட் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் ஒன்றை அண்மையில் வாங்கினார். இந்த லம்போர்கினி கார் PY01 CD 5008 என்ற புதுச்சேரி பதிவு எண்ணுடன் இருப்பது பெங்களூர் போக்குவரத்துத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

புதுச்சேரியில் வரி குறைவு. உதாரணத்திற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான காருக்கு புதுச்சேரியில் ரூ.50,000 வரி விதிக்கப்படுகிறது. அதுவே பெங்களூரில் காரின் விலையில் 18 சதவீதமும், 11 சதவீதம் செஸ் வரியும் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் அளவுக்கு செலுத்த வேண்டும்.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

தர்ஷன் வாங்கியிருக்கும் லம்போர்கினி அவென்டேடார் கார் ரூ.6.5 கோடி மதிப்புடையது. இதற்கு பெங்களூரில் பதிவு செய்தால், வரி கணிசமாக இருக்கும்.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

இதனால்தான் பலர் விலை உயர்ந்த கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து பயன்படுத்துகின்றனர். இதுபோன்று புதுச்சேரி பதிவு எண்ணுடன் பெங்களூரில் பயன்படுத்தப்படும் சொகுசு கார்களை கண்காணிப்பதற்காகவே, பட்டியல் ஒன்றை பெங்களூர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார்கள் எப்போது கர்நாடகாவில் நுழைகின்றன. எப்போது வெளியேறுகின்றன என்பது உள்ளிட்ட விபரங்களை அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

இந்த பட்டியலில் நடிகர் தர்ஷனின் காரும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட கார்களை ஓர் ஆண்டு வரை கர்நாடகாவில் பயன்படுத்த முடியும். அதன்பிறகு பயன்படுத்த விரும்பினால், பெங்களூர் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து, உரிய வரி செலுத்த வேண்டும்.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

அதன்படி, நடிகர் தர்ஷன் வாங்கி இருக்கும் லம்போர்கினி அவென்டேடார் காருக்கு உடனடியாக எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஓர் ஆண்டுக்கு மேல் பயன்படுத்தும் பட்சத்தில் அவர் பெங்களூர் போக்குவரத்து அலுவலகம் ஒன்றில் பதிவு செய்து உரிய வரியையும் செலுத்த நேரிடும்.

 புதுச்சேரி பதிவு எண்ணுடன் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய நடிகர் தர்ஷன்!

நடிகர் தர்ஷன் வாங்கி இருக்கும் கார் பயன்படுத்தப்பட்ட லம்போர்கினி அவென்டேடார் கார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அந்த கார் புதுச்சேரியில் உள்ள வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு பின்னர், அது தர்ஷன் கைக்கு மாறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Source: Bangalore Mirror

Tamil
English summary
Kannada Actor Darshan Lamborghini Super Car Under Bangalore RTO's Watch Register.
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more