உலகின் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் கார்ல்மேன் கிங்

பென்ஸ் ஜி.எல்.எஸ். கிளாஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், டொயாட்டா, லேண்ட் க்ரூஸர், லாம்போகினி அர்ஸ் அதைவிட விலையுயர்ந்த கார் ஒன்று இருக்கிறது அது தான் கார்ல்மேன் கிங்

By Balasubramanian

நாம் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் குறித்து தேடினால் நம்மற்கு கிடைப்பது, பென்ஸ் ஜி.எல்.எஸ். கிளாஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், டொயோட்டா லேண்ட் க்ரூஸர், அதிகபட்சம் லம்போர்கினி உருஸ் வரை கிடைக்கும் ஆனால் அதைவிட விலையுயர்ந்த கார் ஒன்று இருக்கிறது அது தான் கார்ல்மேன் கிங்

உலகின் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் கார்ல்மேன் கிங்

சீனாவை சேர்ந்த ஐ.ஏ.டி., என்ற நிறுவனம் இந்த காரை வடிவமைத்தது. 1,800 பேர் கொண்ட் ஐரோப்பிய குழு இந்த காரை கட்மைத்துள்ளனர். மொத்தம் 12 கார்களை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது

உலகின் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் கார்ல்மேன் கிங்

இந்த கார் முதன் முதலாக 2017ம் ஆண்டு துபாயில் நடந்த சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டது. தயாரிக்கபடும் 12 கார்களுக்கும் விற்பனையாகிவிட்டதா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

உலகின் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் கார்ல்மேன் கிங்

இந்த கார் ஃபோர்டு எப் - 550 காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4,500 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டாலும், குண்டு துளைக்காத முறையில் காரை வடிவமைக்கும் போது காரின் எடை 6,000 கிலோ வரை செல்கிறது.

உலகின் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் கார்ல்மேன் கிங்

இந்த காரில் ஹை-பை சவுண்ட், 4K HD டி.வி., பாதுகாப்பு அறை, போன் புரோஜக்ஷன், சாட்டிலைட் டி.வி., சாட்டிலைட் போன், காபி மேக்கர், எலெக்ட்ரிக் டேபிள், முன், பின் பகுதிகளில் ஏ.சி., அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நியோன் லைட், என பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் இவை அனைத்தும் ஸ்மார்ட் போன் ஆப் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.

உலகின் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் கார்ல்மேன் கிங்

இந்த காரில் உள்ள வசதிகள் ஒரு சிறிய டீ பார்ட்டி நடத்தும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தோற்றம் முழுவதும் கார்பன் பைபர் மற்றும் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் கார்ல்மேன் கிங்

இதன் விலையை பொருத்தவரை இந்திய மதிப்பில் ரூ14.33 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் விற்பனை மற்றும் வாங்கியவர்கள் குறித்த விபரங்களை ஐ.ஏ.டி., நிறுவனம் வெளியிடவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

More from DriveSpark

Article Published On: Sunday, March 25, 2018, 8:30 [IST]
English summary
Karlmann King Is The World's Most Expensive SUV.Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+