விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவிகளும் கிடைக்க வழிவகை செய்யும் நாட்டின் முதல் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்புடன் பொருளாதார ரீதியிலான உதவிகளும் கிடைக்க வழிவகை செய்யும் இந்தியாவின் முதல் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

உலக அளவில் சாலை விபத்துக்களின் காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் 1,46,133 பேரும், 2016ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் 1,50,785 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கிடைக்க செய்யும் பட்சத்தில், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதனை மருத்துவ ரீதியில் 'கோல்டன் ஹவர்' (GOLDEN HOUR) என குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

அதாவது விபத்து நடைபெற்றதில் இருந்து முதல் ஒரு மணி நேரம்தான் 'கோல்டன் ஹவர்' என அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபருக்கு, கோல்டன் ஹவரில் மருத்துவ சிகிச்சை வழங்குவது என்பது அத்தியாவசியமானது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட நபர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

ஆனால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என அலைய வேண்டியது வரும் என்பதால், விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலானோர் முன்வருவதில்லை. ஏனெனில் விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு எதுவும் இதுவரை இல்லை.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

எனினும் விபத்துக்களினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்பவர்களை பாதுகாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின் பேரில், சில வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும், மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு வழங்கியது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

என்றாலும் கூட உதவி செய்யும் நபர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு என்ற ஒன்று இல்லாமல்தான் இருந்தது. இந்த சூழலில், விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நபர்களை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டம் ஒன்றை கர்நாடக மாநில அரசு இயற்றியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை சட்டப்பூர்வமான முறையில் பாதுகாக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை கர்நாடகா பெறுகிறது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு உதவி செய்த நபர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான், கர்நாடக மாநில அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

இந்த புதிய சட்டத்தின்படி, விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்யும் நபர்களுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகள் கிடைக்கும். விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவர்கள் உடனடியாக கிளம்பி விடலாம்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

அத்துடன் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட்டிற்கு மீண்டும் மீண்டும் அலைய வேண்டியது இல்லை. ஒரு வேளை போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டிற்கு வர நேரிட்டால், அதற்கு உண்டான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

விபத்தில் சிக்கிய நபர்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில், எவ்வித விசாரணையும் நடத்தி நேரத்தை கடத்தாமல், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

இதுகுறித்து கர்நாடக மாநில அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உதவாமல் பலர் செல்பி எடுக்கவும், வீடியோ எடுக்கவும் செய்கின்றனர். இது மனித நேயமற்ற செயல். ஒரு சிலர் போலீஸ் விசாரணைக்கு பயந்து கொண்டு உதவி செய்யாமல் இருக்கின்றனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. இனி சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவியும் கிடைக்கும்

ஆனால் இந்த புதிய சட்டத்தின்படி, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்கள் எந்த வகையிலும் தொந்தரவுகளுக்கு ஆளாக மாட்டார்கள். அதனை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்'' என்றார்.

Most Read Articles

டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Karnataka Become The First State In India To Give Legal Protection To Good Samaritans. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X