கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

மிட்சைஸ் செடான் ரகத்தில் புதிய செராட்டோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கியா திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கார் தற்போது பெங்களூரில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

By Saravana Rajan

கியா செராட்டோ செடான் கார் பெங்களூரில் இன்று சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் பிரத்யேக ஸ்பை படங்களையும், கார் பற்றிய தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. அதனைத்தொடர்ந்து பல புதிய மாடல்களையும் தொடர்ந்து வரிசை கட்ட முடிவு செய்து இருக்கிறது.

கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

இந்த நிலையில், மிட்சைஸ் செடான் ரகத்தில் புதிய செராட்டோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கியா திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கார் தற்போது பெங்களூரில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்த சோதனை காரின் பிரத்யேக ஸ்பை படங்களை இங்கே காண்கிறீர்கள்.

கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

புதிய கியா செராட்டோ கார் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும் அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில் கியா நிறுவனத்தின் முத்தாய்ப்பான பட்டர்ஃப்ளை க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. முன்புற பம்பரில் பனி விளக்குகள், அகலமான ஏர் இன்டேக் அமைப்பு என வசீகரமாகவே இருக்கிறது.

கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

பக்கவாட்டில் பாடி கலர் கைப்பிடிகள், ரியர் வியூ கண்ணாடிகளில் இண்டிகேட்டர்கள், 17 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக தெரிகின்றன. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் வசீகரிக்கிறது. ஒட்டுமொத்த டிசைனும் மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் இருக்கிறது.

கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

இன்டீரியரை படம் பிடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. எனினும், இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவை இன்னபிற முக்கிய அம்சங்களாக இருக்கும்.

கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

கியா செராட்டோ காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் பார்க்கிங் கேமரா, ஹில் அசிஸ்ட் மற்றும் 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றிருக்கும்.

கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

ஹூண்டாய் வெர்னா காரில் பயன்படுத்தப்படும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த காரில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!!

இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புதிய கியா செராட்டோ கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும். ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் போன்ற கார்களுக்கும், தனது பங்காளி ஹூண்டாய் வெர்னாவுக்கும் போட்டியாக இருக்கும்.

Article Published On: Thursday, May 24, 2018, 17:54 [IST]
English summary
The 2018 Kia Cerato has been spotted testing in India. DriveSpark has spotted the first Kia Cerato on the streets of Koramangala in Bangalore.
மேலும்... #கியா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+