கியா நிறுவனத்தின் முரட்டு எம்பிவி கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

கியா கிராண்ட் கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்ப்டடு வருவது குறித்த ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. வெள்ளை வண்ணத்திலான அந்த கார் தற்காலிக பதிவு எண்ண

By Saravana Rajan

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராண்ட் கார்னிவல் எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில், இந்த கார் வருவதை உறுதி செய்யும் விதத்தில் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

கியா நிறுவனத்தின் முரட்டு எம்பிவி கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

ஆம். கியா கிராண்ட் கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்ப்டடு வருவது குறித்த ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. வெள்ளை வண்ணத்திலான அந்த கார் தற்காலிக பதிவு எண்ணுடன் இந்தியாவில் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

கியா நிறுவனத்தின் முரட்டு எம்பிவி கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

சில மாதங்களுக்கு முன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த முரட்டு எம்பிவி காரானது, வட அமெரிக்க நாடுகளில் செடோனா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று மாடல்களில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆம், இந்த கார் 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 11 சீட்டர் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

கியா நிறுவனத்தின் முரட்டு எம்பிவி கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

இதில், 11 சீட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக குடும்ப உறுப்பினர்களை கொண்ட இந்திய குடும்பத்தினருக்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும். நெருக்கடி மிகுந்த 7 சீட்டர் மாடல்களுக்கு மாற்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

கியா நிறுவனத்தின் முரட்டு எம்பிவி கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

இந்த காரின் தோற்றம் பிரம்மாண்டமாக இருக்கிறது. வடிவமைப்பிலும் நிச்சயம் இந்தியர்களை கவரும். இந்த காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், அலாய் வீல்கள் போன்ற பல பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கிறது.

கியா நிறுவனத்தின் முரட்டு எம்பிவி கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

கியா கிராண்ட் கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கியா நிறுவனத்தின் முரட்டு எம்பிவி கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

ஆந்திராவில் அமைக்கப்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. எனவே, விலையும் மிக சவாலானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கியா நிறுவனத்தின் முரட்டு எம்பிவி கார் இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்!

அடுத்த ஆண்டு பிற்பகுதியில் அல்லது 2020ம் ஆண்டு துவக்கத்தில் கியா கிராண்ட் கார்னிவல் எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிமியம் எம்பிவி ரகத்தில் வருவதால், ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் அறிமுகமாகும் என்பது இப்போதைய தகவலாகவும் உள்ளதும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 26, 2018, 10:35 [IST]
English summary
Gaadiwaadi has spotted the Kia Grand Carnival in India.
மேலும்... #கியா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+