இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

Written By:

இந்திய அரசுக்காக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முன்வந்துள்ளது கியா கார் நிறுவனம். ஆந்திராவில் கார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவனவுள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது அந்நிறுவனம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

மத்திய அரசு அதன்பயன்பாட்டிற்காக கடந்தாண்டு 500 எலெக்ட்ரிக் கார்களை வாங்கியது. மஹேந்திரா மற்றும் டாடா நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து மத்திய அரசின் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு வழங்கி வருகின்றனர்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

இதையடுத்து இந்தாண்டிற்காக சுமார் 10,000 எலெக்ட்ரிக் கார்கள் தேவை என கடந்த 9ம் தேதி ஏலத்தை நடத்தியது இ.எஸ்.எஸ்.எல்., இந்த ஏலத்தில் சமீபத்தில் ஆந்திரா மாநிலத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றிருக்கும் கொரியன் கார் கம்பெனியான கியா நிறுவனமும் பங்கெடுத்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

தற்போது கியா நிறவனம் அமைக்கப்படும் தொழிற்சாலையில் ஆண்டிற்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறனுடன் அமைக்கப்படுவதால் அந்த கட்டமைப்பை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கெடுத்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

ஏற்கனவே ஆட்டோ எஸ்போ - 2018 ல் அறிமுகமான எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி காருடன் 2019ம் ஆண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவிற்குள் அறிமுகமாக திட்டமிட்டுள்ள கியா நிறுவனம் தனது அடுத்த காராக எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் பயணிகள் பயன்பாட்டிற்கும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

இவை அனைத்தும் வரும் காலங்களில் மத்திய அரசு எலக்ட்ரிக் கார்களுக்காக கட்டமைக்கவுள்ள கார் சார்ஜ் போடும் இடங்கள் உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த முடிவு இறுதி செய்யப்படும்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவு கார் தயாரிக்கும் கம்பெனிகளில் 3 அல்லது 4வது இடத்தை பிடிக்க கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்

இந்தியாவில் கார்களை அதிகளவு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள கியா நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்திற்கு கார் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவில் அவர்களுக்கு கார் தயாரிக்க ஆகும் செலவு இந்தியர்களின் தேவையை பயணிகள் கார் தயாரிக்கும் முன்பே அறிந்த கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

மேலும்... #கியா #kia
English summary
Kia Motors India Will Bid For Supply Of Electric Cars To The Government. Read in tamil

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark