எஸ்யூவி மீது பெட் கட்டும் கியா மோட்டார்ஸ்: 5 கார் மாடல்களை களமிறக்குகிறது!!
தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் 2019ம் ஆண்டு இந்தியாவில் வர்த்தகத்தை துவக்க இருக்கிறது. முதல் மாடலாக மிட்சைஸ் ரக எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆந்திராவில் அமைக்கப்படும் புத
ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் 2019ம் ஆண்டு இந்தியாவில் வர்த்தகத்தை துவக்க இருக்கிறது. முதல் மாடலாக மிட்சைஸ் ரக எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், புதிய எஸ்யூவி மாடல் மீது கியா மோட்டார்ஸ் அதீத நம்பிக்கை தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தற்போது கியா மோட்டார்ஸ் உறுதி செய்துள்ளது.

ஆந்திராவில் அமைக்கப்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் தொழிற்சாலையில் இந்த புதிய எஸ்யூவியின் உற்பத்தி அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் இந்த புதிய ஆலையில் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வரவும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த கியா எஸ்பி கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது.

ட்ரேஸர் என்ற பெயரில் இந்த புதிய கியா எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட சற்றே கூடுதல் விலையில் அதிக பிரிமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களிலும் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த புதிய எஸ்யூவி மட்டுமில்லாமல், அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டிற்குள் இந்த புதிய கியா கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. பிரிமியம் ஹேட்ச்பேக், செடான் கார்களும் இதில் அடக்கம்.


Click it and Unblock the Notifications








