திட்டமிட்ட தேதிக்கு முன்னரே விரைந்து வெளிவரும் கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!!

திட்டமிட்ட தேதிக்கு முன்னரே விரைந்து வெளிவரும் கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!!

By Azhagar

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கால்பதிக்க தயாராகி வருகிறது. இந்நிறுவனம் தயாரித்து வரும் புதிய கார்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

அந்த நிகழ்ச்சியில் கியா மோட்டார்ஸ் வெளியிட்ட எஸ்பி கான்செப்ட் காம்பேக்ட் எஸ்யூவி கார் பெரியளவில் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

தொடர்ந்து அந்த காருக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி காரை முடிவுசெய்யப்பட்ட தேதிக்கு முன்னரே விற்பனைக்கு கொண்டு வர கியா திட்டமிட்டு வருகிறது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

இந்த தகவலை எக்கானமிக் டைம்ஸ் செய்தித்தளம் வெளியிட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்.பி கான்செப்ட் காருக்கு கிடைத்த வரவேற்பை உணர்ந்து கியா இந்த முடிவை எடுத்துள்ளதாக இ.டி செய்தி தெரிவிக்கிறது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

கியா நிறுவனத்திற்கே உரிய தாத்பரியங்களோடு, இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில் எஸ்பி கான்செப்ட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

இந்தியாவின் எதிர்கால எஸ்யூவி கார் தேவைகளை கருதி, அதற்கேற்றவாறான கட்டமைப்பு நிலைப்பாடு, ஸ்போர்டி திறன் மற்றும் நீண்ட ஹூடு பகுதிகளை இந்த கார் பெற்றிருப்பது அசத்தலாக உள்ளது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

இந்தியக்கிளை கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை மற்றும் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரியாக மனோகர் பட் நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்பி கான்செப்ட் கார் தயாரிக்க 4 மாதங்கள் என முடிவு எடுக்கப்பட்டது. அது தற்போது 2 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் மொத்தம் 16 விதமான புதிய ரக கார்களை கியா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது. அப்போது கியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் பெரிய வரவேற்பை அளித்தனர்.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

இதனால் உற்சாகமடைந்த கியா, இந்தியாவில் எந்தமாதியான கார் பயன்பாட்டு தேவைகள் உள்ளன, கார்களின் கட்டமைப்பில் இந்தியா எதை புதியதாக விரும்புகிறது என்ற கோணத்தில் ஆய்வையும் மேற்கொண்டு வருகிறது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

எஸ்பி கான்செப்ட் காம்பேக்ட் எஸ்யூவி காரை தொடர்ந்து, சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை 2020ம் ஆண்டுவாக்கில் கியா வெளியிடுகிறது. தொடர்ந்து ப்ரீமியம் தர ஹேட்ச்பேக் கார் மாடலும் அதே ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

2020ம் ஆண்டின் முடிவில் இந்தியாவில் கியா மூன்று கார்களை வெளியிட்டு இருக்கும். இதனால் அந்நிறுவனம் இந்தியாவின் டாப் விற்பனை பட்டியலிலும் இடம்பெறுவது எளிது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

இந்திய சந்தைக்கு ஏற்றவாறான தாத்பரியங்களோடு தான் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார் தயாராகியுள்ளது. தொடர்ந்து சர்வதேசளவில் சில நாடுகளில் இது வெளியிடப்படுகிறது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் இந்தியாவில் இந்த கார் மாருதி எஸ் கிராஸ், ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுடன் போட்டி போடும்.

இதனுடைய விலை என்ற அடிப்படையில் பார்க்கும் போது எஸ்பி கான்செப்ட் இந்தியாவில் பிரபல ப்ரீமியம் ரக கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைந்து வெளிவரும் கியாவின் எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி கார்..!

ஆட்டோ எக்ஸ்போவில் கால்பதித்து, இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ள கியா எஸ்பி கான்செப்ட் கார், 2019ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil: Kia SP Concept SUV India Launch Sooner Than Expected. Click for Details...
Story first published: Saturday, February 17, 2018, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X