கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது!

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் அடிப்படையிலான தயாரிப்பு நிலை மாடலுக்கான பெயர் விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் அடுத்த ஆண்டு இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. புத்தம் புதிய எஸ்யூவி மாடலை முதலாவதாக களமிறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது!

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எஸ்பி கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி மாடல்தான் முதலில் வர இருக்கிறது. இந்த நிலையில், எஸ்பி கான்செப்ட் அடிப்படையிலான புதிய எஸ்யூவிக்கு பெயரிடும் முயற்சிகளில் கியா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.

கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது!

இதற்காக, டஸ்க்கர், ட்ரேஸர், எஸ்பி-இசட் மற்றும் ட்ரெயில்ஸ்டெர் ஆகிய 4 பெயர்களை பரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், இந்த காரை வாங்க தகுதியான வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யூவிக்கான பொருத்தமான பெயரை தேர்வு செய்து தரக்கூறி இணையதளத்தில் வாக்கெடுப்பையும் நடத்தி வருகிறது.

கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது!

இதில், ட்ரெஸர் என்ற பெயர் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. 4 பெயர்களில் கிட்டத்தட்ட 61 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. எனவே, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ்யூவிக்கு ட்ரேஸர் என்ற பெயர்தான் வைக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது!

இந்த வாக்கெடுப்பில் பங்குபெறும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் போட்டியையும் அறிவித்துள்ளது. இதில், வெற்றிபெறும் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தின் பிரத்யேக ஆக்சஸெரீகளை பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது!

கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலானது ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் அமைக்கப்பட்டு வரும் புதிய கார் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த ஆலையில் உற்பத்திப் பணிகள் துவங்கும். இந்த ஆலை ஆண்டுக்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருக்கும்.

கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது!

புதிய கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலானது ரெனோ கேப்ச்சர், மாருதி எஸ் க்ராஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட்டிற்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது!

முதலாவதாக எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்த பின்னர், தொடர்ந்து பல புதிய மாடல்களை ரக வாரியாக வரிசை கட்ட திட்டமிட்டுள்ளது கியா மோட்டார்ஸ். அடுத்த 18 மாதங்களில் பல புதிய கியா கார்கள் இந்திய மண்ணில் தடம் பதிக்க உள்ளன.

Most Read Articles
மேலும்... #கியா
English summary
Kia will bring in the production-spec, SP Concept SUV to India sometime during mid-2019.
Story first published: Friday, May 25, 2018, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X