பயணிகளின் பாதுகாப்பிற்காக அரசு பஸ்களில் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி அறிமுகம்.. தனியார் பஸ்கள் கலக்கம்

அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளை தீ விபத்துக்களில் இருந்து பாதுகாக்க, இஸ்ரேல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ள, எப்டிஎஸ்எஸ் (FDSS) டெக்னாலஜியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

By Arun

அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளை தீ விபத்துக்களில் இருந்து பாதுகாக்க, இஸ்ரேல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ள, எப்டிஎஸ்எஸ் (FDSS) என்ற டெக்னாலஜியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (Karnataka State Road Transport Corporation-KSRTC), பிரீமியம் லக்ஸரி பஸ்களை இயக்கி வருகிறது. KSRTC இயக்கி வரும் சில பிரீமியம் லக்ஸரி பஸ்கள், சாலையில் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென தீப்பற்றி எரிகின்றன.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவுக்கு, ஸ்லீப்பர் கோச் (Sleeper Coach) பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், சுமார் 20 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

கே.ஆர்.புரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. ஆனால் பஸ்ஸின் பின் பகுதியில் இருந்து புகை வருவதை, டிரைவர் குமாரசாமி முன்கூட்டியே கண்டறிந்து விட்டார். எனவே தூங்கி கொண்டிருந்த பயணிகள் அனைவரையும் உடனடியாக அவர் எழுப்பினார்.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

இதனால் பயணிகள் அனைவரும், பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி விட்டனர். டிரைவர் குமாரசாமி துரிதமாக செயல்பட்டதால், 20 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபோல் KSRTC இயக்கும் சில பிரீமியம் லக்ஸரி பஸ்களில், திடீரென தீப்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

எனவே அனைத்து பிரீமியம் லக்ஸரி பஸ்களிலும், ஃபயர் டிடெக்ஸன் அண்டு சப்ரஸன் சிஸ்டமை (Fire Detection and Suppression System-FDSS), பொருத்த KSRTC முடிவு செய்துள்ளது. பஸ்ஸின் எந்த பகுதியில் தீ பற்றினாலும், அதனை உடனடியாக கண்டறிந்து அணைக்க, FDSS சிஸ்டம் உதவி செய்யும்.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

நவீன டெக்னாலஜியான இது, இஸ்ரேல் மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இன்ஜின் கம்பார்ட்மெண்டில் இருந்துதான், தீ பற்ற தொடங்குகிறது. ஆனால் KSRTC இயக்கும் பெரும்பாலான பிரீமியம் லக்ஸரி பஸ்களின் பின் பகுதியில்தான் இன்ஜின் உள்ளது.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

எனவே தீ பற்றியதை டிரைவர்களால் கண்டறிய முடியாமல் போய் விடுகிறது. சமீபத்தில் தீ பிடித்த திருப்பதி-பெங்களூரு பஸ்ஸில் கூட, பின் பகுதியில்தான் இன்ஜின் இருந்தது. ஆனால் அந்த பஸ்ஸின் பின்பகுதியில் புகை கிளம்பியதை, ரியர் வியூ மிரர் மூலமாக, டிரைவர் குமாரசாமி பார்த்து விட்டார்.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

எனவே அதிர்ஷ்டகரமாகதான் 20 பயணிகளும் உயிர் தப்பினர். ஆனால் தீ அல்லது ஓவர் ஹீட்டிங் காரணமாக, இன்ஜின் கம்பார்ட்மெண்டின் வெப்பநிலை உயர்ந்தாலும், அதனை கண்டறிந்து விடும் திறன் FDSS சிஸ்டமுக்கு உள்ளது. எனவே பயணிகள் அச்சமின்றி நிம்மதியாக பயணம் செய்யலாம்.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

தற்போதைய நிலையில், KSRTC இயக்கும் அனைத்து பிரீமியம் லக்ஸரி பஸ்களிலும் தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை மேன்யூவலாக இயக்க வேண்டும். அதற்கு சிறிது நேரம் பிடிக்கும். ஆனால் FDSS சிஸ்டம் அப்படி அல்ல.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

வெறும் 5-6 வினாடிகளில், தீயை அணைத்து விடும் திறன் FDSS சிஸ்டமுக்கு உள்ளது. KSRTC புதிதாக கட்டமைக்கும் பிரீமியம் லக்ஸரி பஸ்களில், FDSS சிஸ்டம் இன் பில்ட்டாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

ஆனால் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 477 பழைய பிரீமியம் லக்ஸரி பஸ்களில், FDSS சிஸ்டம் கிடையாது. எனவே அந்த பஸ்கள் அனைத்திலும்தான், FDSS சிஸ்டம் பொருத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. கேஎஸ்ஆர்டிசி-யின் இந்த முடிவு, பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு பஸ்களில் அறிமுகமாகும் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி..

பொதுவாக பஸ்களில் தீ விபத்து ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பழைய பஸ்களிலும், முறையாக பராமரிக்கப்படாத பஸ்களிலும் எளிதாக தீப்பிடித்து விடும். ஒரு சில இயந்திரங்கள் செயல்படாமல் போவதாலும் தீப்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக அரசு பஸ்களில் இஸ்ரேல், ஸ்வீடன் டெக்னாலஜி அறிமுகம்.. தனியார் பஸ்கள் கலக்கம்

தமிழக அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே உள்ளது. பெரும்பாலான தமிழக அரசு பஸ்கள், ஓட்டை, உடைசல்களாகதான் இயக்கப்படுகின்றன. எனவே தமிழக அரசு பஸ்கள் அனைத்தையும், இது போல் நவீனகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கவனிக்குமா?

More from DriveSpark

Article Published On: Monday, August 27, 2018, 11:44 [IST]
English summary
KSRTC Decided to Install Fire Detection Systems in it's Buses. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+