ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

ஹூண்டாய் க்ரொட்டா காருடன் போட்டி போட்டு கேடியும் 390 டியூக் பைக்கில் 180 கீ.மீ. வேகத்தில் புயலாய் பறந்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. முறையான பாதுகாப்பும் இல்லாமல் விதிமுறைகள

By Balasubramanian

ஹூண்டாய் க்ரொட்டா காருடன் போட்டி போட்டு கேடியும் 390 டியூக் பைக்கில் 180 கீ.மீ. வேகத்தில் புயலாய் பறந்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. முறையான பாதுகாப்பும் இல்லாமல் விதிமுறைகளையும் மீறி இவர் பயணம் செய்துள்ளது. இவருக்கு ஏற்றார் போல் காரில் வருபவரும் அதிபயரங்கர வேகத்தில் சென்றுள்ளார். இது குறித்த முழு செய்தியை கீழே படியுங்கள்

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

பைக்கில் வேகமாக செல்வது என்றால் நம் இளைஞர்களுக்கு கேட்கவா வேண்டும். இளம் கன்று பயம் அறியாது என்பது போல் இளைஞர்கள் எந்த பயமும் இல்லாமல் ரோட்டில் அதிக வேகத்தில் பைக் ஓட்டுவதை நாம் இன்று காண முடிகிறது.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

இதில் போட்டி என்று வந்து விட்டால் கேட்கவா வேண்டும். ரோட்டில் செல்லும் போது ஒருவரை ஒருவர் முந்தி செல்வதற்காக போட்டி போட்டு கொண்டு அதிக வேகத்தில் செல்கின்றனர். இதில் இருக்கும் ஆபத்து பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை பயமும் இல்லை இவ்வாறு ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சென்ற ஒரு சம்பவம் குறித்து கீழே பார்போம் வாருங்கள்

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

இந்த வீடியோவில் அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி மட்டும் அல்ல மிக வேகமாக சென்றார். மேலும் பைக்கின் லீன் ஆங்கிளும் மிக அதிகமாக இருந்தது. இந்த பைக் மட்டும் அல்லாமல் இந்த பைக்குடன் சேர்ந்து ஒரு ஹூண்டாய் க்ரெட்டா காரும் சென்றிருந்தது. இந்த இரண்டு வாகனங்களும் சுமார் 170 கி.மீ. வேகத்தை கடந்து ரோட்டில் புயலாய் பறந்தன.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

இந்த வேகம் இந்திய ரோட்டில் மிகவும் பாதுகாப்பற்ற ஒன்று. இந்த வீடியோவின் முதல் பாதியில் கேடிஎம் டியூக் 390 பைக் ஹூண்டாய் க்ரெட்டா காரை வேகமாக சென்று முந்தியது. பைக் முந்தியதும் அதன் கேம் குறைந்தது. இரண்டாம் பாதியில் க்ரெட்டா கார் மீண்டும் புயலாய் பாய்ந்து மிக வேகமாக டியூக் 390 பைக்கை முந்தியது. அதன் பின் நடந்தது தான் மோசமான சம்பவம்

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

மீண்டும் கேடிஎம் பைக்கை ஓட்டியவர் அதிகவேகமாக செல்ல ஆரம்பித்தார் பைக் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து 150 கி.மீ. வேகத்தை தொட ஆரம்பித்தது. இருந்தும் விடாமல் பைக்கை முறுக்கெற்றி பறக்க ஆரம்பித்தார். சுமார் 170 கி.மீ. வேகத்தை கடந்து இந்த பைக் சென்றது.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

அப்பொழுது அவர் அதிவேகத்தில் சென்ற ஹூண்டாய் க்ரெட்டா காரையும் முந்தினார். இருந்தும் பைக்கில் சென்றவர் விடவில்லை. தொடரந்து வேகத்தை அதிகரித்து சென்று கொண்டிருந்தார். பைக் சுமார் 180 கி.மீ வேகத்தை தொட்டிருக்கும். அதனுடன் விடியோ முடிகிறது.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

இந்த சம்பவதில் அதிகவேகத்தில் இரண்டு வாகனமும் செல்லும் போது ஏதேனும் ஒருவர் ஒரு கண்ணிமைக்கும் பொழுது கண்ட்ரோலை இழந்திருந்தால் அங்கு பெரும் விபத்தே நிகழ்ந்திருக்கும் சில உயிர் பலிகள் கூட ஆகியிருக்கலாம்.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

கேடிஎம் டியூக் 390 பைக்கை பொருத்தவரை 373 சிசி லிக்யூட் கூல் பியூயல் இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உள்ள பைக் பழைய மாடல் பைக், இது 44 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் 0-100 கி.மீ. வேகத்தை வெறும் 6 நொடிகளில் கடந்து விடும் திறனை கொண்டது.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

இந்த கேடிஎம் 390 பைக் பாக்கெட் மான்

ஸ்டர் பைக்காகவும், அடிக்கடி விபத்துக்களிலும் சிக்கும் பைக். இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் இருந்தாலும் இந்த வேகத்தில் அது சிறப்பாக செயல்பட்டு விபத்தை தவிர்க்கும் என சொல்ல முடியாது.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

மேலும் இந்த வீடியோவில் பைக்கில் செல்பவர் 170 கீ.மீ வேகத்தில் முறையான ரைடிங் கியரும் இல்லாமல் பயணிக்கிறார்.இளைஞர்கள் பெரும்பாலும் ரைடிங் கியர்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அதற்கானவிழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

அதே போல இந்த வீடியோவில் ஹூண்டாய் க்ரெட்டா காரில் வந்தவரும் தொடர்ந்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் காரில் சுமார் 170 கி.மீ. வேகத்தில் பயணித்துள்ளார் அது மிகவும் அபாயகரமானது. இந்தியாவில் அந்த வேகத்தில் செல்வது உயிருக்கு உத்தரவாதம் அற்றது.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

இந்தவீடியோவில் வந்த கார் ஹூண்டாய் க்ரெட்டாவின் டாப் எண்ட் மாடல் கார். இது 126 பிஎச்பி பவரையும், 259 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பவர் நீங்கள் கவனமான இல்லை என்றால் பெரும் விபத்தை கூட ஏற்படுத்தி விடும். இந்த வீடியோவில் க்ரெட்டா காரை ஓட்டிவரும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுள்ளது.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

இவ்வளவு நேரம் வீடியோ வீடியோ என்று சொல்லி கொண்டே இருக்கிறீர்களே எங்கே அந்த வீடியோ என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களுக்காக அந்தவீடியோவை கீழே கொடுத்துள்ளோம் பாருங்கள். இந்த வீடியோவை பார்த்து விட்டு நீங்களும் இதை முயற்சிக்க நினைக்காதீர்கள் பெரும் ஆபத்தில் முடிந்து விடும்.

ப்ளீஸ் இதை நீங்க முயற்சி பண்ணாதீங்க... 180 கி.மீ வேகத்தில் பறந்த கார் மற்றும் பைக்- வீடியோ

இந்த வீடியோ யூடியூவில் பல ஆயிரம் வியூக்களை அள்ளிதரலாம். ஆனால் இது ஒரு பொறுப்பற்ற தனமான முயற்சி. இதை பார்த்து சிலர் இதே போல முயற்சிக்ககூடும். நீங்கள் காரை வேகமாக ஓட்ட வேண்டும் என்றால் உங்களுக்காகவே இருக்கவே இருக்கிறது ரேஸ் டிராக் இங்கு நீங்கள் முறையான பயிற்சியுடன் எவ்வளவு வேகத்தில் வேண்டுமானாலும் செல்லலாம் விதிமீறல் கிடையாது. முக்கியமான இனி பைக் ஓட்டினால் ரைடிங் கியரை மறந்து விடாதீர்கள்

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
KTM Duke 390 street racing a Hyundai Creta at 180 kmph. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X