2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய 2019 மாடல் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பிரிமீயம் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய 2019 மாடல் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பிரிமீயம் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் ஏராளமான புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் சக்தியை வழங்கும் வகையில் எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாடலானது வசதிகளை பொறுத்து Pure, SE மற்றும் HSE ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், இதுவரை இருந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரை வழங்கும் திறன் பெற்றிருந்தது. ஆனால், தற்போதைய மாடலில் டீசல் எஞ்சின் 177 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்

அதேநேரத்தில், புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் ப்யூர் வேரியண்ட்டில் 147 பிஎச்பி பவரை அளிக்கும் எஞ்சினுடன் கிடைக்கும். SE மற்றும் HSE வேரியண்ட்டுகளில் 177 பிஎச்பி பவரை அளிக்கும் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலுமே 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் தேர்வுக்கு உள்ளது சிறப்பு.

2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி HSE டாப் வேரியண்ட்டில் டைனமிக் டிசைன் பேக் மற்றும் டச் புரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வந்துள்ளது. டைனமிக் டிசைன் பேக்கில் தோற்ற பொலிவை கூட்டும் விதத்திலான விசேஷ பாடி கிட் கொடுக்கப்படுகிறது. விசேஷ கருப்பு வண்ண க்ரில், சிவப்பு வண்ண ஸ்போர்ட் என்ற பேட்ஜ், க்ரோம் பூச்சுடன் கூடிய புகைப்போக்கி குழல் ஆகியவை அடங்கும்.

2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்

இந்த புதிய மாடல் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோஹித் சூரி கூறுகையில்," 2019 மாடல் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் திறன் மிக்கதாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஓட்டுதல் மற்றும் பயண அனுபவத்தை வழங்கும்.

2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்

2019 மாடலாக வந்திருக்கும் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி ரூ.44.68 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்-3, ஆடி க்யூ5 மற்றும் மெர்சிடிஸ் பென்்ஸ் ஜிஎல்சி ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

Article Published On: Wednesday, December 12, 2018, 12:48 [IST]
English summary
Jaguar Land Rover has launched their 2019 Discovery Sport in India. The MY2019 Land Rover Discovery Sport is priced at Rs 44.68 lakh, ex-showroom (Delhi). The 2019 model comes with a number of updates, most important being the re-tuned engine which now produces more power output.
மேலும்... #லேண்ட்ரோவர்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+