ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

90’s கிட்ஸ் எல்லாம் கிட்ஸாக இருக்கும் போது அவர்களது ஃபேவரேட் டிவி ஷோவான WWE போட்டியில் பங்கேற்ற பிரபல நட்சத்திரங்களின் கார்களையும், பற்றி இந்த பட்டியலில்பார்க்கலாம், பெரும்பாலானோர் உயர் ரக கார்களை

By Bala

90's கிட்ஸ் எல்லாம் கிட்ஸாக இருக்கும் போது அவர்களது ஃபேவரேட் டிவி ஷோவான WWE போட்டியில் பங்கேற்ற பிரபல நட்சத்திரங்களின் கார்களையும், பற்றி இந்த பட்டியலில்பார்க்கலாம், பெரும்பாலானோர் உயர் ரக கார்களையே வைத்திருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக ஜான்சினாவிற்கும், ராக்கிற்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார் என்றால் அதிக விருப்பமாம்.

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

90's கிட்ஸ் எல்லாம் கிட்ஸாக இருக்கும்போது தவறாமல் பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சி என்றால் அது WWEதான். அந்த காலத்தில் சிறுவர்கள் மத்தியில் பெரிதும் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை பார்த்து சில விபரீத சம்பவங்களும் நடந்துள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

வீட்டில் இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு பள்ளிக்கூடம் சென்று இந்த நிகழ்ச்சியில் வருவது போல சண்டை போட்டு மண்டையை உண்டைத்துக்கொண்ட சிறுவர்களும் இருக்கிறார்கள்.

ரோல்ஸ் ராய்ஸ்

இப்படியாக அன்றைய சிறுவர்களுக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் பிடித்தமான WWEயில் சண்டையிட்ட பிரபலங்களின் கார்கள் பற்றிதான் பார்க்க இருக்கிறோம், இந்த பட்டியலை பார்த்தால் அசந்து போயிருவீங்க.

ஜான்சினா

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

செவர்லே கேமரோ

ஜான்சினா முதலில் ஃபோர்டு ஜிடி40 கார் வைத்திருந்தார். பின்னர் அவர் அதை விற்று விட்டு செவர்லே கேமரோ காரை வைத்திருக்கிறார். இது 1969ம் ஆண்டு மாடல் கார். இதை இவர் இன்னும் தனது கராஜில் வைத்து பாதுகாத்து வருகிறார். இந்த கார் 427 பிக் பிளாக் இன்ஜினை கொண்டது.

ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம்

ஜான்சினா மிகப்பெரிய கார் ரசிகர். அவரிடம் புதிய ரக கார்களும் உள்ளது. அவரிடம் 2006ம் ஆண்டு மாடல் ரோல்ல்ராய்ஸ் பாந்தோம் கார் இருக்கிறது. இது 6.75 லிட்டர் வி12 இன்ஜினை கொண்டது. இது 453 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ரோல்ஸ் ராய்ஸ் கார் சொகுசு காராக இருந்தாலும், இந்த கார் பெர்பார்மென்ஸிலும் சிறந்து விளங்குகிறது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்கிறது. இது மட்டும் இல்லாமல் அவரிடம் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி சூப்பர் ஸ்போர்ட்ஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராபி ஆகிய கார்களும் உள்ளன.

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

ஃபோர்டு எப்150

ராக் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். இவர் WWEல் கலக்கிவிட்டு இப்பொழுது ஹாலிவுட் படங்களிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர். இவரிடம் கஸ்டம் பில்ட் ஃபோர்டு எப்150 பிக்கப் டிரக் இருக்கிறது. இது முழுவதும் கஸ்ட்ம் பில்டால் செய்யப்பட்டது. மேலும் அவர் அதே போல மற்றொரு டிரக்கையும் வைத்திருக்கிறார். முழுவதும் கருப்பு நிறத்தினாலான இந்த டிரக்கை அவர் "கருப்பு கொரில்லா" என்றே அழைக்கிறார். இது 5.0 லிட்டர் வி8 இன்ஜினை கொண்டது. இது அதிகபட்சமாக 570 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

ராக்

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

ரோல்ஸ் ராய்ஸ் வெரைத்

ராக் மேலும் கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் வெரைத் காரை வைத்திருக்கிறார். இதை அவ்வப்போது மட்டுமே அவர் பயன்படுத்துவார். இந்த கார் இரண்டு டோர்களுடன் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த கார் 6.5 லிட்டர் டுவின் டர்போ வி12 இன்ஜினை பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 623 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் இவரிடம் காடிலாக் எஸ்கலேட் காரும் உள்ளது.

ஸ்டோன் கோல்டு

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர்

தமிழ்நாட்டில் ஸ்டோன்கோல்டிற்கு என பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் தான் பயன்படுத்துவதற்காக ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வைத்திருக்கிறார். அவரது கராஜில் உள்ள லேட்டஸ்ட் கார் இதுதான். மேலும் அவரிடம் 1995ம் ஆண்டு மாடல் ஃபோர்டு போர்ன்கோ காரும் உள்ளடங்கும். ரேஞ்ச் ரோவர் காரைதான் அவர் அதிகம் பயன்படுத்துகிறார்.

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

மெக்லாரன் 720 எஸ்

ஸ்டோன்கோல்டு ஸ்டீவ் ஆஸ்டீன், மெக்லாரன் 720 எஸ் காரை சொந்தமாக வைத்திருக்கிறார். அவரது கராஜில் உள்ள அதிக விலை மதிப்புள்ள கார் இதுதான். இந்த காரில், 4.0 லிட்டர் வி8 டுவின் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 0100 கி.மீ வேகத்தை 2.8 நொடிகளில் பிக்கப் செய்யக்கூடியது. மேலும் இது அதிகபட்ச வேகமாக 341 கி.மீ வேகத்தில்பயணிக்கும்.

ட்ரிப்பிள் எச்

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

காடிலாக் எஸ்கலேட்

ட்ரிப்பிள் எச் WWE போட்டியில் வித்தியாசமாக சண்டை போடும் திறன் கொண்டவர். அவரது கார் டேஸ்ட்டும் வித்தியாசமாக இருக்கிறது. இவர் காடிலாக் எஸ்கலேட் காரை சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த அமெரிக்கன் எஸ்யூவி காரில் 6.2 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 420 பிஎச்பி பவரையும், 624 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹல்க் ஹோஹன்

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

டோஜ் செலஞ்சர் டீமோன்

ஹல்க் ஹோஹன் அவரது கலரான டிரன்ஸிங் ஸ்டைல் மூலமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவர் அமெரிக்கன் காரான டோஜ் செலஞ்சர் டீமோன் காரை வைத்திருக்கிறார். அந்த காரில் ஸ்பீடு கவர்னர் பொருத்தப்பட்டிருந்தது. ஸ்பீடு கவர்னருடனும் அந்த கார் அதிகபட்சமாக 258 கி.மீ. வேகத்தில் செல்லும். தற்போது அவர் அதை நீக்கியுள்ள நிலையில், அந்த காரின் அதிகபட்ச வேகம் 326 கி.மீ.

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

செவர்லே கேமரோ

ஹல்க் ஹோஹன், செவர்லே கேமரோ காரின் பல்வேறு வருட மாடல் கார்களை வைத்திருக்கிறார். அந்த காரின் லேட்டஸ்ட் மாடலும் அவரிடம் இருக்கிறது. அவர் அடிக்கடி அந்த காரைதான் அதிகம் பயன்படுத்துகிறார்.

ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக அடித்துக்கொண்ட ஜான்சினா - ராக்; WWE பிரபலங்களின் கார் கலெக்ஷன்

இவர்கள் இந்த கார்களை எல்லாம் WWE போட்டியில் கலந்து கொண்டு அதன் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு வேறு சில பிஸ்னஸ்களில் முதலீடு செய்து அதில் இருந்து வரும் வருமானம் மூலமே வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Article Published On: Saturday, September 22, 2018, 11:09 [IST]
English summary
List of wwe stars cars johnsena tripleh stonegold rock. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+