வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

நாகரீகம் வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கார் தேவைப்படுகிறது. வெறுமனே கவுரவத்திற்காக மட்டும் அல்லாமல், அன்றாட பயன்பாட்டிற்காகவும் நிச்சயமாக காரின் தேவை உள்ளது.

By Arun

நாகரீகம் வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கார் தேவைப்படுகிறது. வெறுமனே கவுரவத்திற்காக மட்டும் அல்லாமல், அன்றாட பயன்பாட்டிற்காகவும் நிச்சயமாக காரின் தேவை உள்ளது. ஆனால் விலை அதிகமாக இருக்கும் எனக்கருதி பலர் செகன்ட் ஹேன்ட் கார்களையே வாங்குகின்றனர். ஆனால் புதிய பெட்ரோல் இன்ஜின் கார்களை வெறும் 4 லட்ச ரூபாய்க்குள் வாங்க முடியும். அப்படிப்பட்ட 5 கார்களை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

ரெனால்டு க்விட்

ரெனால்டு க்விட் காரில் 799 சிசி 4 வேல்யூ டிஓஎச்சி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. ரெனால்டு கிவிட் காரின் எஸ்டிடி மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 2.66 லட்ச ரூபாய் மட்டுமே. பேஸிக் மாடல் காராக இருந்தாலும், பலரின் இதயங்களை இந்த கார் கொள்ளையடித்துள்ளது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

25.17 கிலோ மீட்டர் மைலேஜ்

மைலேஜ்ஜை முக்கியமாக கருதுபவர்களுக்கு ரெனால்டு க்விட் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் ரெனால்டு க்விட் கார் ஒரு லிட்டருக்கு 25.17 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது. 5,678 ஆர்.பி.எம்.மில் 53.3 பி.எச்.பி பவரையும், 4,386 ஆர்.பி.எம்.மில் 72 என்.எம். டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

டாப் ஸ்பீட்

இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 135 கிலோ மீட்டர். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 16 வினாடிகளில் எட்ட முடியும். இந்த காரின் பூட் ஸ்பேஸ் 300 லிட்டர்.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

மாருதி சுசூகி ஆல்டோ 800

இந்திய கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று. இன்று பெரிய பெரிய கார்களை வைத்திருக்கும் பலருக்கும் ஆல்டோதான் முதல் காராக இருந்திருக்கும். இந்த காரை மெயின்டனன்ஸ் செய்வதும், சர்வீஸ் செய்வதும் மிகவும் சுலபம்.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

மைலேஜ் 24.7 கிலோ மீட்டர்

இந்த கார் ஒரு லிட்டருக்கு 24.7 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2.51 லட்சம். 796 சிசி இன்ஜினை கொண்ட மாருதி சுசூகி ஆல்டோ 800 கார், 6,000 ஆர்.பி.எம்.மில் 47.3 பி.எச்.பி பவரையும், 3,500 ஆர்.பி.எம்.மில் 69 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

ஆக்ஸலரேஷன் சற்று குறைவு

இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 140 கிலோ மீட்டர். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை 19 வினாடிகளில் எட்டலாம். இதன் ஆக்ஸலரேஷன் ரெனால்ட் க்விட்டை காட்டிலும் சற்று குறைவுதான். இதுவும் 5 கியர்களை கொண்ட கார்தான்.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

டட்சன் ரெடி-கோ

இந்த பட்டியலில் மூன்றாவதாக நாம் காணவிருக்கும் கார் டட்சன் ரெடி-கோ. இந்த கார் மிகவும் சிறியதாக இருப்பதால், டிராபிக் ஜாம் ஆகியிருந்தாலும் கூட கிடைக்கும் சிறிய இடைவெளியில் புகுந்து சென்று விட முடியும். மற்றவர்களால் இது முடியாது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

2.49 லட்ச ரூபாய்

டட்சன் ரெடி-கோ காரின் எக்ஸ் ஷோரூம் விலை 2.49 லட்ச ரூபாய் மட்டுமே. 799 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5,678 ஆர்.பி.எம்.மில் 53.64 பி.எச்.பி பவரையும், 4,386 ஆர்.பி.எம்.மில் 72 என்.எம். டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

மைலேஜ் 22.7 கிலோ மீட்டர்

டட்சன் ரெடி-கோ கார் ஒரு லிட்டருக்கு 22.7 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது. இந்த காரிலும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் பொருத்தப்பட்டுள்ளது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

மாருதி சுசூகி ஆல்டோ கே 10

மிகவும் விலை மலிவான கார்களின் பட்டியலில் நாம் அடுத்து காணவிருப்பது மாருதி சுசூகி ஆல்டோ கே 10. ஆல்டோ சீரியஸின் மற்றொரு வகைதான் ஆல்டோ கே 10. கடந்த 2010ம் ஆண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

இன்ஜின்

மாருதி சுசூகியின் கே சீரியஸ் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 998 சிசி திறன் கொண்ட இந்த இன்ஜின், 67 பி.எச்.பி பவரையும், 90 என்.எம்.டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

24.07 கிலோ மீட்டர் மைலேஜ்

மாருதி சுசூகி ஆல்டோ கே 10 காரின் எக்ஸ் ஷோரூம் விலை 3.29 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 24.07 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது. இதுவும் 5 கியர் கொண்ட கார்தான்.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

டாடா டியாகோ

இந்த பட்டியலில் நாம் 5வது மற்றும் கடைசியாக காணவிருக்கும் கார் டாடா டியாகோ. இதுவும் 5 கியர் கொண்ட கார்தான்.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

சக்தி வாய்ந்த இன்ஜின்

இதுவரை நாம் பார்த்த கார்களிலேயே அதிக சக்தி கொண்ட இன்ஜின் இதுதான். இது 1,199 சிசி திறன் கொண்டது. 84 பி.எச்.பி பவரையும், 114 என்.எம்.டார்க் திறனையும் உருவாக்க கூடிய சக்தி வாய்ந்தது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

23 கிலோ மீட்டர் மைலேஜ்

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 3.3 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஒரு லிட்டருக்கு 23 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.

வெறும் 4 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு புதிய கார்களா?

சிக்கனமான விலை

இந்த கார்கள் அனைத்தும் 4 லட்ச ரூபாய்க்குள் வாங்க கூடியவை. செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு பதிலாக இந்த கார்களை கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

Most Read Articles
English summary
Looking for a cheap car? Five petrol cars you can buy under Rs 4 lakh. read in tamil
Story first published: Thursday, May 10, 2018, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X