மும்பை - புனே நகரங்களுக்கு இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!
மும்பை- புனே இடையே ஹைப்பர்லூப் போக்குவரத்து தடம் அமைப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை- புனே நகரங்களுக்கு இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் அதிவேக போக்குவரத்து தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருக்கிறது.

மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை வாய்ந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டத்திற்கான யோசனை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த புதிய போக்குவரத்து சாதனத்தை நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

உலகின் பல்வேறு நாடுகள் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் தடத்தை அமைப்பதற்கான முயற்சியில் மஹாராஷ்டிர அரசு ஈடுபட்டு இருக்கிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களாக விளங்கும் மும்பையிலிருந்து புனே நகரை இணைக்கும் விதத்தில், ஹைப்பர்லூப் போக்குவரத்து தடத்தை அமைப்பதற்காக விர்ஜின் குழுமத்துடன் மஹாராஷ்டிர அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பாதகங்கள் குறித்து மிக தீவிரமான ஆய்வுகள் செய்த பின்னர், அடுத்த 6 மாதங்களில் ஹைப்பர்லூப் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

ஹைப்பர்லூப் சாதனங்கள் மின்சார ஆற்றலில் இயங்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு தொந்தரவு இருக்காது. அதிகபட்சமாக மணிக்கு 1,000 கிமீ வேகத்தில் இயக்கும் கட்டமைப்புடன் இந்த போக்குவரத்து சேவை துவங்கப்படும் என்று விர்ஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவி மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனே நகரில் உள்ள மெட்ரோபாலிஸ் வரையில் ஹைப்பர்லூப் தடம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது மும்பை- புனே நகரங்களுக்கு இடையே சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் அடைவதற்கு கிட்டத்தட்ட 3 மணிநேரம் பிடிக்கிறது. ஹைப்பர்லூப் சாதனத்தில் வெறும் 20 நிமிடங்களில் இரு நகரங்களையும் இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை அமையும் பகுதி இதுதான்..!!

கடல் நீரால் முழுவதுமாக சூழ்ந்திருக்க, அங்கு ஒரு விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதி நம் நாட்டில் தான் இருக்கிறது என்றால் ஆச்சர்யமானது தான்.
ஆம், விமானம் ஓடுபாதையை அடைவதற்கு தரையிரங்கும் முன் விமானத்தில் இருந்து பார்த்தால், சுற்றிலும் கடல் தான் தெரியும்.

அகத்தி வானூர்தித் தளம், இந்திய எல்லையான லட்சத்தீவு ஒன்றிய பகுதியில் அமைந்துள்ளது. அங்கு தான் இப்படிப்பட்ட கடல்சூழ் விமானம் ஓடுபாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அதிசிய விமான நிலையங்களில் ஒன்றாகவும் லட்சத்தீவு அகட்டி வானூர்தித் தளம் அடையாளப்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய இந்திய விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, கடல் சூழ் விமான ஓடுபாதையை ஏ.ஆர்.டி ரக விமானங்கள் தரையிறங்க வசதியாக வலுவூட்டப்பட்ட சிமெண்டுகளை கொண்டு கடலுக்கு அடியில் இருந்து தூண்கள் கட்டமைக்கப்படவுள்ளன.

36 தீவுகளை கொண்ட பகுதியாக லட்சத்தீவு உள்ளது. அருகில் உள்ள இரண்டு தீவுகளை இணைப்பதற்காக முதலில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

தற்போது அதை கிடப்பில் போட்டு, அகட்டி விமான ஓடுபாதையை மேலும் விரிவுப்படுத்த இந்திய விமான போக்குவரத்து துறை மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.

இதுப்பற்றி பேசிய இந்திய விமான துறையின் மூத்த அதிகாரி ஒருவர், சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய காரணத்தினால் இரு தீவுகளை இணைக்கும் பணி கைவிடப்பட்டது என்றார்.

மேலும் அவர், கடலில் ஆழம் நிறைந்த பகுதியில் வலுவான தூண்கள் அமைக்கப்பட்டு, வலுவூட்டப்பட்ட சிமெண்டுகளால் ஓடுபாதை கட்டமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.

அகட்டி விமான ஓடுபாதையின் விரிவாக்க பணிகளுக்காக ரூ. 1500 கோடியை செலவிட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மட்டும் நிறைவேறிவிட்டால் ஏ.ஆர்.டி -72 ரக விமானங்களை இந்த ஓடுபாதையில் இயக்க முடியும்.

அகட்டி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதால் இந்திய அரசிற்கு அதிக பலன்கள் உள்ளன. லட்சதீவு என்பது மத்திய அரசால் அங்கரீக்கப்பட்ட இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளம்.

அரேபியக் கடலோரட்தில் 36 தீவுகளுடன் அமைந்திருக்கும் இந்த பகுதியை காண ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்தியர்களை தவிர பல வெளிநாட்டினர் அதிக விரும்பும் சுற்றுலா தளமாகவும் லட்சத்தீவுகள் உள்ளன.

இந்நிலையில் இதற்கான வருவாயை பெருக்கவே, தற்போது, மத்திய அரசு அகட்டி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்கிறது. இதனால் சுற்றுலாத்துறைக்கான வருவாய் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








