மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

தென் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஆஃப்ரோடு பயிற்சி மையம் கர்நாடக மாநிலம், மங்களூரில் திறக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த எமது செய்தியாளர் ஸ்டீபன் நீல் தரும் விரிவானத் தகவல்கள், பிரத்யேக படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

ஆஃப்ரோடு சாகச பிரியர்களுக்கான போட்டிகள், பயணங்களை ஏற்பாடு செய்து தருவதில் மஹிந்திரா நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுபோன்ற ஆஃப்ரோடு பிரியர்களின் ஆர்வத்துக்கு தீணி போடும் விதத்தில், மஹிந்திரா அட்வென்ச்சர் என்ற பிரிவு மூலமாக, பல்வேறு விஷயங்களை அந்த நிறுவனம் செய்து வருகிறது.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

இந்த நிலையில், ஆஃப்ரோடு சாகசப் பயணம் மேற்கொள்வோருக்கு முறையான பயிற்சி அளிக்கும் விதத்தில்,2012ம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம், இகத்புரியில் பிரத்யேக ஆஃப்ரோடு சாகச பயிற்சி மையத்தை திறந்தது. தற்போது மங்களூரில் தனது இரண்டாவது பயிற்சி மையத்தை திறந்துள்ளது. இது தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த ஆஃப்ரோடு பிரியர்களுக்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும்.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

மங்களூரை சேர்ந்த பனா கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய ஆஃப்ரோடு சாகச பயிற்சி மையத்தை மஹிந்திரா அமைத்துள்ளது. அந்த கல்வி நிறுவனத்தின் வளாகத்திலேயே இந்த புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையமும் 150 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இகத்புரி பயிற்சி மையம் 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில், இது மிகவும் பரந்துவிரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

மங்களூரில் அமைந்துள்ள ஆஃப்ரோடு சாகச பயிற்சி மையத்திற்கு தேவையான எஸ்யூவி ரக கார்கள், உபகரணங்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவற்றை மஹிந்திரா நிறுவனம் வழங்கும். பயிற்சி மையத்திற்கான இடத்தை பனா கல்வி நிறுவனம் வழங்கி இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

மங்களூர் பயிற்சி மையத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, மஹிந்திரா தார் உள்ளிட்ட எஸ்யூவி வாகனங்களில் பயிற்சி கொடுக்கப்படும். தினசரி ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கூடுதல் உபகரணங்களுடன் சிறிய மாற்றங்களை பெற்றிருக்கின்றன.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

முன்புறத்தில் பம்பர் எடுக்கப்பட்டுள்ளதுடன், சஸ்பென்ஷனிலும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. நீர் நிலைகளை கடந்து செல்லும்போது எஞ்சினுக்கு காற்று கிடைக்கும் விதத்தில், ஸ்நோர்க்கெல் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. வண்டி கவிழ்ந்தாலும், உள்ளே இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ரோல் கேஜ் பொருத்தப்பட்டுள்ளன.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவிகளில் லோ ரேஷியோ கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

திறப்பு விழாவின்போது 5.5 கிமீ நீளமுடைய இந்த பயிற்சி மையத்தின் ஆஃப்ரோடு தடத்தில் கார் ஓட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மிக சவாலான அந்த பந்தய களத்தில் ஓட்டும்போது மிக த்ரில்லான அனுபவத்தை தந்தது. செங்குத்தான பாதைகள், கரடுமுரடான சாலைகள், நீர் நிலைகள், பாறைகள் என மிக கடினமான சாலைகளை கடக்கும் விதத்தில் இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

மொத்தத்தில் இந்த பயிற்சி மையம் ஆஃப்ரோடு பிரியர்களுக்கு மிக த்ரில்லான அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை. மேலும், பயிற்சியாளர்கள் மூலமாக, ஒவ்வொரு அபாயமான பகுதியையும் கடப்பதற்கான வழிமுறைகள் சொல்லி தரப்படுவதால், சமாளித்துவிட முடியும்.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

இந்த பயிற்சி மையத்தில் லெவல்-1 எனப்படும் ஆரம்ப கட்ட பயிற்சிக்கு Getting Dirty என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இதில், ஆஃப்ரோடில் ஓட்டுவதற்கான அடிப்படையான விஷயங்கள் சொல்லித் தரப்படுகிறது. இதற்கு ரூ.7,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

லெவல்- 2 எனப்படும் இரண்டாம் நிலை பயிற்சியில் Trail Survivor என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கடினமான சாலை நிலைகளில் கடந்து வருவதற்கான நுணுக்கங்கள் இந்த லெவல்-1 பயிற்சின்போது சொல்லித் தரப்படுகிறது. இதற்கு ரூ.17,500 கட்டணம். இந்த பயிற்சியில் இரவு தங்குவதற்கான அறை வசதியும் உள்ளடக்கியது.

மஹிந்திராவின் புதிய ஆஃப்ரோடு பயிற்சி மையம் மங்களூரில் திறப்பு!

கடந்த 2012ம் ஆண்டு துவங்கப்பட்ட இகத்புரி மஹிந்திரா அட்வென்ச்சர் ஆஃப்ரோடு அகடமி அமைப்பு மூலமாக இதுவரை 3,000 பேர் ஆஃப்ரோடு பயிற்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், மங்களூரில் திறக்கப்பட்டு இருக்கும் புதிய பயிற்சி மையம் மூலமாக தென் இந்தியாவை சேர்ந்தோர் முறையான ஆஃப்ரோடில் ஓட்டுவதற்கான பயிற்சியை பெற வழி வகுத்துள்ளது.

Most Read Articles

Tamil
மேலும்... #மஹிந்திரா
English summary
Mahindra Adventure launches its second Off-Road Training Academy in the nation to train off-road enthusiasts. The new Off-Road Training Academy is located at Mangalore in the state of Karnataka and aims to make off-road training more accessible to those interested.
Story first published: Monday, November 19, 2018, 11:22 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more