மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4... பிரத்யேக படங்களுடன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

மஹிந்திராவின் மிக விலை உயர்ந்த பிரிமியம் கார் மாடலாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி வரும் 24ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆன்லைனில் முன்பதிவும் ஏற்கப்படுகிறது. அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த புத்தம் புதிய எஸ்யூவியின் பிரத்யேக படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம், படங்கள் மூலமாக இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களையும் பார்த்துவிடலாம். புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் 63 பிரத்யேக படங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4... பிரத்யேக படங்களுடன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

ரீபேட்ஜ் மாடல்

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள சாங்யாங் ரெக்ஸ்டன் ஜி4 எஸ்யூவிதான் இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் அல்டுராஸ் ஜி4 என்ற பெயரில் வர இருக்கிறது. நவீன டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய கலக்கலாக இருக்கிறது. வசதிகளிலும் போட்டியாளர்களை விஞ்சும் விதத்தில் இருக்கிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4... பிரத்யேக படங்களுடன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

முகப்பு டிசைன்

முகப்பில் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்குரிய முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு, லோகோ இடம்பெற்றிருக்கிறது. வலிமையான பானட் மற்றும் பம்பர் அமைப்பு கம்பீரத்தை கொடுக்கிறது. எல்இடி பனி விளக்குகள், ஸ்கிட் பிளேட் ஆகியவையும் இதன் முக்கிய சிறப்பு அம்சங்களாக கூறலாம்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4... பிரத்யேக படங்களுடன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டில் மிக பெரிய சக்கரங்கள், வலிமையான டி பில்லர் அமைப்பு, ரூஃப் ரெயில்கள், க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்ட ஜன்னல்கள் என மிகவும் பிரிமியமாக இருக்கிறது. இந்த எஸ்யூவி 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. ஹெட்லைட்டையும், டெயில் லைட்டையும் இணைக்கும் ஷோல்டர் லைன் எஸ்யூவிக்கு உரிய மிரட்டலை கொடுக்கிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4... பிரத்யேக படங்களுடன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

பின்புற டிசைன்

படுக்கை வாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் கச்சிதமான டெயில் லைட் க்ளஸ்ட்டர், வலிமையான பம்பர் அமைப்பு, ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவையும் சிறப்பு சேர்க்கின்றன. பம்பருக்கு மேலே அல்டுராஸ் ஜி-4 பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: ஜாவாவை தொடர்ந்து யெஸ்டி பைக்குகளை களமிறக்கும் மஹிந்திரா!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4... பிரத்யேக படங்களுடன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

இன்டீரியர்

வெளிப்புறத்தை போலவே, உட்புறத்திலும் மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரமும் மிகச் சிறப்பு. அழகான டேஷ்போர்டு அமைப்பு, அலுமினியம் மற்றும் மரக் கலரிலான அலங்கார வேலைப்பாடுகள் பிரிமியமாக காட்டுகின்றன.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4... பிரத்யேக படங்களுடன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

முக்கிய அம்சங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் அதிக இடவசதியை இந்த மாடல் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது, போட்டியாளர்களைவிட தொழில்நுட்ப வசதிகளிலும், இடவசதியிலும் சற்றே மேம்பட்டு இருக்கும்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி-4... பிரத்யேக படங்களுடன் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

எதிர்பார்க்கும் விலை

வரும் 24ந் தேதி புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் விலை விபரம் வெளியிடப்பட இருக்கிறது. ரூ.23 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களைவிட மிக குறைவான விலையில் வரும் என்பதால் எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டுள்ளது.

Most Read Articles

Tamil
மேலும்... #மஹிந்திரா
English summary
The new Mahindra Alturas G4 is the most premium SUV, ever to come from the legendary Indian brand. As Mahindra is readying to launch the new Alturas G4 seven-seater SUV on the market soon, bookings have been opened on their official website. Before we share our detailed driving impressions of it, check out around 100 photos of the new Mahindra Alturas G4.
Story first published: Saturday, November 17, 2018, 18:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more