ஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா!

கடந்த ஆண்டு மஹிந்திரா மற்றும் ஃபோர்டு கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட முடிவு செய்தன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் போடப்பட்டது. இந்த நிலையில், ஃபோர்டு கார் நிறுவ

ஃபோர்டு கார் நிறுவனத்துக்கு பெட்ரோல் எஞ்சின்களை சப்ளை செய்வதற்கு மஹிந்திரா ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா!

கடந்த ஆண்டு மஹிந்திரா மற்றும் ஃபோர்டு கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட முடிவு செய்தன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் போடப்பட்டது. இந்த நிலையில், ஃபோர்டு கார் நிறுவனத்துக்கு பாரத் ஸ்டேஜ்- 6 மாசு உமிழ்வு தர பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்வதற்கு மஹிந்திரா ஒப்பந்தம் செய்துள்ளது.

ஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா!

ஃபோர்டு நிறுவனத்தின் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளன.

ஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா!

இந்த நிலையில், பிஎஸ்- 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான குறைவான சிசி திறன் கொண்ட புதிய பெட்ரோல் எஞ்சினை மஹிந்திரா உருவாக்கி ஃபோர்டு நிறுவனத்துக்கு சப்ளை செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா!

மேலும், வரும் 2020ம் ஆண்டு முதல் இந்த புதிய பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதுதவிர, தற்போது பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் எஞ்சின்களையும் இரு நிறுவனங்களும் மேம்படுத்துவதற்கான திட்டமும் இந்த கூட்டணியிடம் உள்ளது.

ஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா!

புதிய பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, கார்களுக்கான தகவல் தொழில்நுட்ப சாஃப்ட்வேர்களையும் இந்த கூட்டணி உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய சாஃப்ட்வேர்களை ஃபோர்டு மற்றும் மஹிந்திரா கார்களில் பயன்படுத்தப்பட உள்ளன.

ஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா!

இந்த புதிய கூட்டணி செயல்பாடு மூலமாக, இரு நிறுவனங்களும் புதிய எஞ்சின் தயாரிப்புக்கான முதலீடு மற்றும் மென்பொருள் உருவாக்கத்திற்கான செலவீனத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் வாய்ப்பை பெற இயலும்.

ஃபோர்டு கார்களுக்கு பெட்ரோல் எஞ்சினை சப்ளை செய்யப்போகும் மஹிந்திரா!

மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வசதிகளை அளிக்க முடியும் என்று இரு நிறுவனங்களும் கருதுகின்றன. நிச்சயம் இந்த கூட்டணி மூலமாக இரு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கும் குறைவான விலையில் அதிக தொழில்நுட்ப வசதிகளை பெறும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Mahindra and Ford have now signed agreements on Powertrain sharing and Connected Car Solutions. According to the agreements signed, Mahindra will be supplying Ford with BS-VI emission norms compliant petrol engines.
Story first published: Thursday, October 18, 2018, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X