புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

புதிய மஹிந்திரா கார்களை வாங்குவதற்கு பதிலாக, தேவைப்படும் காலத்திற்கு குத்தகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளும் புதிய வாடகை திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் க

புதிய மஹிந்திரா கார்களை குத்தகை அடிப்படையில் எடுத்து நீண்ட காலம் வாடகைக்கு பயன்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் மஹிந்திராவின் கார் மாடல்கள், கட்டண விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

புதிய மஹிந்திரா கார்களை வாங்குவதற்கு பதிலாக, தேவைப்படும் காலத்திற்கு குத்தகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளும் புதிய வாடகை திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கேயூவி100 நெக்ஸ்ட் மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்கள் குத்தகைக்கு கிடைக்கிறது

புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

இந்த புதிய குத்தகை திட்டத்தின்படி, கேயூவி100 நெக்ஸ்ட் எஸ்யூவிக்கு மாதத்திற்கு ரூ.13,499 குத்தகை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாதத்திற்கு ரூ.32,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் காருக்கான பராமரிப்பு செலவு, சாலை வரி, இன்ஸ்யூரன்ஸ், சாலை அவசர திட்டம் மற்றும் விபத்து பழுது செலவுகள் அடங்கும்.

புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

புதிய கார் வாங்கும்போது செலுத்த வேண்டிய முன்பணம், மாதத் தவணை, பதிவு கட்டணம் என எதுவுமே செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலே குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதுமானது. மேலும், குத்தகை காலம் முடிந்தவுடன், காரை திருப்பி கொடுத்துவிடலாம்.

புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

இதனால், மறுவிற்பனை மதிப்பு குறித்து வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை. மேலும், குத்தகை காலம் முடிந்து பயன்படுத்திய காரை கொடுத்துவிட்டு, புதிய காரை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

முதல்கட்டமாக புனே, ஆமதாபாத், பெங்களூர், ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த குத்தகை திட்டத்தை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. தொழில்முறை பணியாளர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் தேவைகளை இந்த குத்தகை திட்டம் பூர்த்தி செய்யும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

தற்போது கேயூவி100 நெக்ஸ்ட் மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்கள் இந்த குத்தகை திட்டத்தின் கீழ் கிடைக்கும். இரண்டாம் கட்டமாக கேயூவி100, டியூவி300, ஸ்கார்ப்பியோ மற்றும் அண்மையில் அறிமுகமான மராஸ்ஸோ கார்களும் இந்த குத்தகை திட்டத்தின் கீழ் வாடகைக்கு கிடைக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

இந்த குத்தகை திட்டத்தை ஓரிக்ஸ் மற்றும் ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் மூலமாக மஹிந்திரா செயல்படுத்த உள்ளது. குறைந்தபட்சம் ஒரு மாதம் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இந்த குத்தகை திட்டத்தின் கீழ் புதிய காரை எடுத்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த திட்டம் நகரத்திற்கு நகரம் வேறுபடும்.

புதிய மஹிந்திரா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்!

இன்ஸ்யூரன்ஸ், பராமரிப்பு செலவுகள் அடக்கம் என்பதுடன் முன்பணம் இல்லாமல் எடுத்து ஓட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதால் தொழிலதிபர்கள், பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், சிறிய வர்த்தக நிறுவன அதிபர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

Article Published On: Thursday, October 18, 2018, 13:16 [IST]
English summary
Mahindra & Mahindra has introduced a new leasing scheme to retail its SUVs in the Indian market. The new leasing scheme is introduced for the entry-level Mahindra KUV100 NXT and the XUV500. Mahindra's leasing scheme will make the ownership experience of these vehicles more affordable and convenient.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+