மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டிற்குள் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!

இந்தியாவின் குறைவான விலை மினி எஸ்யூவி மாடலாக மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் என்ற இடைசீர்திருத்தம் செய்யப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!

இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், ஏஎம்டி கியர்பாக்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அண்மையில் ஏஎம்டி மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்த ஸ்பை படங்கள் வெளியானது.

மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!

இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டிற்குள் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது. பெட்ரோல் மாடல் தொடர்ந்து 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!

மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலின் ஏஎம்டி கியர்பாக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதனிடையே, மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடலும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!

மேலும், கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளின்படி, மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் உடல்கூடு அமைப்பு வலுப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட உள்ளது.

மஹிந்திரா கேயூவி100 டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்!

அதேபோன்று,2020ம் ஆண்டு நடைமுறைக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர கொள்கைகளுக்கு இணையானதாக, கேயூவி100 எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் எஞ்சின்களும் மேம்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான பணிகளும் நடந்து வருவதாக மஹிந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Thursday, September 27, 2018, 11:27 [IST]
English summary
Mahindra & Mahindra is all set to introduce a new variant of the KUV100 in the Indian market. Yes, the Mahindra KUV100 diesel-AMT will be launched soon in the country. Previously, we had reported about the Mahindra KUV100 AMT being spotted on Indian roads.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+