மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் எஸ்யூவியின் ஏஎம்டி மாடலில், அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்படவில்லை.

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அண்மையில் பெங்களூரில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அதன் பிரத்யேக ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் எஸ்யூவியின் ஏஎம்டி மாடலில், அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்படவில்லை. ஏஎம்டி பேட்ஜ் மட்டுமே அடையாளம் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது விற்பனையில் இருக்கும் KUV100 NXT மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கும், இந்த புதிய ஏஎம்டி மாடலுக்கும் பேட்ஜ் தவிர்த்து வெளிப்புற வடிவமைப்பில் எந்த வித்தியாசங்களும் இல்லை. மல்டி ஸ்போக் அலாய் வீல்களும், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இன்டீரியரும் கூட ஒரே மாதிரிதான் தெரிகிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் லிவர் கொடுக்கப்பட்டு இருக்கும் பகுதி மட்டுமே மாற்றம் தெரிகிறது. மற்றபடி உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் கொடுக்கப்பட இருக்கிறதா அல்லது டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வழங்கப்படுமா? அல்லது இரண்டு மாடல்களிலுமே கொடுக்கப்படுமா என்பது குறித்த உறுதியானத் தகவல் இல்லை. பெட்ரோல், டீசல் மாடலில் கொடுக்கப்பட்டால் சிறந்த தேர்வாக மாறும்.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்த எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் தற்போது கிடைக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

டீசல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இதுவும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த எஸ்யூவி மாடலானது 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் தேர்வுகளில் கிடைப்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் எஸ்யூவியானது தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது ரூ.4.68 லட்சம் முதல் ரூ.7.76 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 NXT ஏஎம்டி மாடலின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ரூ.30,000 கூடுதல் விலையில் ஏஎம்டி மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் பட்ஜெட் விலை எஸ்யூவி மாடல் என்பது இதன் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.

Article Published On: Monday, October 22, 2018, 10:55 [IST]
English summary
Mahindra & Mahindra is gearing up for the launch of the AMT variant of the KUV100 NXT micro SUV in the Indian market. The company has been testing the KUV100 NXT AMT on Indian roads for quite some time. Now, we have spotted the Mahindra KUV100 NXT AMT in Bangalore.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+