புதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக்குகள் அறிமுகம்!
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் வரிசை டிரக்குகள் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் விதத்த
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய டிரக் மாடல்களின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா பிளேஸோ டிரக்குகளைவிட இந்த புதிய பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக் மாடல்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் இருக்கும். இந்த டிரக்குகளின் உராய்வு மற்றும் இயக்க நிலை பாகங்களில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் மற்றும் நுட்பம் கையாளப்பட்டருப்பதே, அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற வழி வகுக்கின்றன.

ஃப்யூவல் ஸ்மார்ட் என்ற புதிய தொழில்நுட்பத்தில் கிடைக்கும் இந்த டிரக்குகள் எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் இத்தருணத்தில் சிறப்பான தேர்வாக அமையும். இதன்மூலமாக, இந்த டிரக்குகளின் இயக்குதல் செலவு வெகுவாக குறையும்.

புதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக் மாடல்களானது டிராக்டர் - டிரெயிலர், டிப்பர் மற்றும் ஹாலேஜ் எனப்படும் மல்டி ஆக்சில் ரகம் என அனைத்து மாடல்களிலும் கிடைக்கும் என்பது மற்றொரு சிறப்பு.

இந்த டிரக்குகளின் அறிமுகத்தோடு மற்றொரு முக்கிய அறிவிப்பையும் மஹிந்திரா டிரக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 3,800 கிமீ தூரம் கொண்ட வடக்கு - தெற்கு வழித்தடத்தில் 41 சர்வீஸ் மையங்கள் நிறுவப்பட்டு வருவதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, ஒவ்வொரு 100 கிமீ தூரத்திற்கும் ஒரு மஹிந்திரா டிரக்குகளுக்கான சர்வீஸ் மையம் அமைய இருக்கிறது. இதன்மூலமாக, மஹிந்திரா டிரக் உரிமையாளர்களும், ஓட்டுனர்களும் எளிதாக மஹிந்திரா டிரக்குகளில் ஏற்படும் பழுதுகளையும், பராமரிப்புப் பணிகளையம் செய்ய முடியும்.

குறைந்தது 4 மணிநேரத்திற்குள் இந்த சர்வீஸ் மையங்கள் மஹிந்திரா டிரக்குகளுக்கான உரிய சேவையை வழங்கும். அப்படி இல்லாமல், தாமதமாகும்பட்சத்தில் ஒவ்வொரு ஒரு மணி நேர தாமதத்திற்கும் ரூ.500 வரை இழப்பீடு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை - டெல்லி வழித்தடத்திலும் இதேபோன்ற சர்வீஸ் மையங்களை மஹிந்திரா ஏற்படுத்த உள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவுத் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில்," எங்களது புதிய பிளேஸோ எக்ஸ் வரிசை கனரக டிரக்குகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை அளிக்கும். இந்த ரகத்தில் இந்த டிரக்குகள் முன்மாதிரியாக இருப்பதுடன், அதிக வருவாயை ஈட்டித் தரும்," என்று கூறினார்.

புதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் வரிசை டிரக்குகள் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனால், புதிய மஹிந்திரா பிளேஸோ எக்ஸ் ரேஞ்ச் டிரக்குகளுக்கான வரவேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரக வாகனப் பிரிவில் மஹிந்திரா நிறுவனம் மூன்றாவது இடத்தில் முக்கிய நிறுவனமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications