புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காருக்கு வேரியண்ட்டை பொறுத்து காத்திருப்பு காலம் 6 வாரங்கள் வரை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து, கடந்த மாதம் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி எர்டிகாவைவிட சற்றே கூடுதல் விலையிலும், கூடுதல் இடவசதி மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் இந்த கார் களமிறக்கப்பட்டது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

விற்பனைக்கு வந்த முதல் மாதத்தில் சுமாரான விற்பனையை பதிவு செய்த இந்த கார் தற்போது பண்டிகை காலத்தில் சிறப்பான விற்பனையை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த காருக்கு இதுவரை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காத்திருப்பு காலம் வேரியண்ட்டை பொறுத்து 6 வாரங்கள் வரை நீடிக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

சுறா மீனின் உருவ அமைப்பை பரைசாற்றும் அம்சங்களுடன் டிசைன் செய்யப்பட்ட இந்த காரில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. டபுள் பேரல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், சுறா துடுப்பை நினைவூட்டும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்புடன் இந்த கார் அசத்தலாக வந்தது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, சர்ரவுண்ட் கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரின் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் மற்றும் பெஞ்ச் இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

இரண்டு ஏர்பேக்குகள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும், பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கணிசமான புக்கிங்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ரூ.13.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு கிடைத்திருக்கும் முன்பதிவு எண்ணிக்கை மஹிந்திரா நிறுவனத்துக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இந்த மாதம் விற்பனை மேலும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பில் மஹிந்திரா காத்திருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 20, 2018, 18:34 [IST]
English summary
Mahindra recently launched their Marazzo MPV in the Indian market in September 2018. Now, a month after its launch Mahindra has announced that the MPV has already received more than 10,000 bookings.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+