மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!!
விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு நடந்து வருவதாக தகவல் கூறுகிறது.
விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் விரைவில் வரும் புதிய மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புத்தம் புதிய எம்பிவி ரக காரை மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது. மராஸ்ஸோ என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த கார் செப்டம்பர் 3ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், சில மஹிந்திரா டீலர்களில் புதிய மராஸ்ஸோ எம்பிவி காருக்கு ரகசியமாக முன்பதிவு பெறப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. ரூ.20,000 முன்பணத்துடன் இந்த ரகசிய முன்பதிவு சில டீலர்களில் நடக்கிறது.

அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கும்போது இப்போது பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் விபரம் மஹிந்திரா டீலர்களுக்கான ஆன்லைன் தளத்தில் பதிவு செய்யப்பட்டு, முன்னுரிமை பெறுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் வருகிறது. மாருதி எர்டிகா காரைவிட சற்று கூடுதல் இடவசதியுடன், சற்றே கூடுதல் விலையில் வர இருக்கிறது. அதாவது, எர்டிகாவுக்கும், இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

புதிய மஹிந்திரா எம்பிவி கார் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது. இரட்டை குடுவை அமைப்புடைய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ரூஃப் ஏசி, தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் மற்றும் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வரும் புதிய மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
Source:Autocar India


Click it and Unblock the Notifications








