கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது. இதில், மஹிந்திரா மராஸ்ஸோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளி

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சிறப்பான மதிப்பீட்டை பெற்று இந்தியர்களை தலைநிமிர செய்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது. இதில், மஹிந்திரா மராஸ்ஸோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை பெற்றது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

சிறியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமான 40 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன்படி, பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 4 ஸ்டார் ரேட்டிங்கும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

கடந்த நவம்பர் 16ந் தேதிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் ஒன்றுதான் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே, கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்திய மராஸ்ஸோ காரில் ஏதேனும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டதா அல்லது கட்டமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

சிறியவர்களுக்கான பாதுகாப்பில், சைல்டு இருக்கை முன்னோக்கி அதிவேகத்தில் செல்லும் வாய்ப்புள்ளது. இதனால், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிக காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 2 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

அதேபோன்று, பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் ஓட்டுனரின் நெஞ்சுப்பகுதிக்கான பாதுகாப்பு சற்று குறைவாக, ஏற்றுக் கொள்ள தக்க அளவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்புற சீட் பெல்ட் ரிமைன்டர் வசதியும் குளோபல் என்சிஏபி அமைப்பின் வழிகாட்டு முறைகளுக்கு ஒப்பானதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

எனினும், இதுவரை தயாரிக்கப்பட்ட மஹிந்திரா கார்களில் கிராஷ் டெஸ்ட்டில் அதிகபட்சமான தர மதிப்பீட்டை மராஸ்ஸோ பெற்றிருக்கிறது. அத்துடன், எம்பிவி ரக கார்களில் ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரெனோ லாட்ஜி, செவர்லே என்ஜாய், மாருதி ஈக்கோ உள்ளிட்ட கார்கள் சொதப்பிய நிலையில், மஹிந்திரா மராஸ்ஸோ கார் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ கார் ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் சந்தைக்கு வந்தது. இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

மஹிந்திரா மராஸ்ஸோ காருடன் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டாடா நெக்ஸான் எஸ்யூவி 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தி இருக்கிறது. குளோபல் என்சிஏபி அமைப்பின் சோதனைகளில், 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் முதல் இந்திய தயாரிப்பு கார் மாடல் என்ற பெருமையையும் டாடா நெக்ஸான் பெற்றிருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்!

மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களும் கிராஷ் டெஸ்ட் சோதனையில் சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகவும், பாதுகாப்பான கார்களை இந்திய நிறுவனங்களும் தயாரிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மேலும், இந்தியாவில் கடை விரித்திருக்கும் வெளிநாட்டு கார் நிறுவனங்களும் இனி பாதுகாப்பான கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான நிர்பந்தத்தையும் இரு நிறுவனங்களும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்க முடியும்.

Article Published On: Saturday, December 8, 2018, 10:56 [IST]
English summary
Mahindra Marazzo Crash Test Results: Global NCAP (New Car Assessment Programme) has revealed the crash test results for the Mahindra Marazzo. The Marazzo MPV has scored an impressive four-star safety rating, making it the first-ever 'Made-in-India' MPV to get such a result.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+