மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட எம்பிவி, எஸ்யூவி ரக கார்களை மிக சொகுசாக மாற்றி வாடிக்கையாளர்களை வசியம் செய்து வைத்திருக்கிறது டிசி டிசைன் நிறுவனம். இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் ச

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரை சொகுசு காரை மிஞ்சிய வகையில், மிக அட்டகாசமான முறையில் கஸ்டமைஸ் செய்து அசத்தி இருக்கிறது டிசி டிசைன் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட எம்பிவி, எஸ்யூவி ரக கார்களை மிக சொகுசாக மாற்றி வாடிக்கையாளர்களை வசியம் செய்து வைத்திருக்கிறது டிசி டிசைன் நிறுவனம். இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ 7 சீட்டர் காருக்கும் கஸ்டமைஸ் பேக்கேஜை வழங்குகிறது டிசி நிறுவனம்.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

டேஷ்போர்டில் அலங்கார மரத்தகடுகள் மற்றும் க்ரோம் ஆக்சஸெரீகளுடன் மிக கவர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் வீலும் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. கதவுகளிலும் லெதர் மற்றும் அலங்கார மரத்தகடுகளுடன் பிரிமீயம் கார் போல காட்சியளிக்கிறது. அதற்கு தக்கவாறு விசேஷ விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

டிசி கஸ்டமைஸ் பேக்கேஜில் முக்கிய அம்சமாக மிக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. நடுவரிசையிலும், பின் வரிசையிலும் தலா இரண்டு பெரிய இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நடுவரிசை இருக்கைகளை போதுமான அளவு சாய்த்துக் கொள்ள முடியும்.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

இரண்டு இருக்கைகளுக்கும் நடுவில் இடம்பெற்றிருக்கும் ஆர்ம் ரெஸ்ட்டில் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆரம்ரெஸ்ட் முன்புறத்திலேயே டிவி திரைகளை கட்டுப்படுத்தும் தொடு உணர் பட்டன்கள் கொண்ட திரை இடம்பெற்றுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

மிக வசதியான ஹெட்ரெஸ் அமைப்பும் சிறப்பாக உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கைகளும் மிக சொகுசாக இருக்கிறது. இந்த இருக்கைகளும் அலுப்பில்லாத பயணத்தை வழங்கும். ஆனால், நடுவரிசையில் உள்ள இருக்கைகள் அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் வணிகர்கள் மற்றும் அதிகாரிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

மிக சொகுசான இருக்கைகள் தவிர்த்து ஆன்ட்ராய்டு டிவி, ஐ-பேட் மற்றும் ஐ-பாட் வைப்பதற்கான இடவசதி, 12 வோல்ட் சார்ஜர், 7 லிட்டர் கொள்திறன் கொண்ட குளிர்சாதன பெட்டி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

இதுதவிர்த்து, எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எமெர்ஜென்சி அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

டிசி டிசைன் கஸ்டமைஸ் பேக்கேஜ் உள்புறத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வெளிப்புறத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. இதற்கு முக்கிய காரணம், இது மஹிந்திரா மூலமாகவே நேரடியாகவே வழங்கப்படுவதுதான்.

மஹிந்திரா மராஸ்ஸோ காரை வேற லெவலில் கஸ்டமைஸ் செய்த டிசி டிசைன்!

பொதுவாக, டிசி நிறுவனத்தை நேரடியாக அணுகும் விதத்திலேயே, இந்த கஸ்டமைஸ் பணிகள் செய்து தரப்படுகிறது. ஆனால், மராஸ்ஸோ காருக்காக டிசி டிசைன் நிறுவனத்துடன் மஹிந்திரா நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, மஹிந்திரா டீலர் மூலமாகவே கஸ்டமைஸ் பேக்கேஜை முன்பதிவு செய்து வாங்க முடியும்.

டிசி கைவண்ணத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்!

மஹிந்திரா மராஸ்ஸோ கார் போன்றே, இந்தியாவின் தன்னிகரற்ற எம்பிவி கார் மாடலாக விளங்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கும் அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜை வழங்குகிறது டிசி நிறுவனம். அதனைத்தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்!

டொயோட்டா இன்னோவா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது டிசி டிசைன்ஸ் நிறுவனம். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன்டீரியர் பேக்கேஜ்களை விட இது மிகவும் சிறப்பாக இருக்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் சொகுசு அம்சங்களை ஒருபடி மேலே எடுத்துச் செல்லும் வகையில் வந்திருக்கும் இந்த பேக்கேஜ் குறித்த படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லாஞ்ச் அல்டிமேட் என்ற பெயரில் இந்த புதிய பேக்கேஜை டிசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வெளிப்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன் தனித்துவம் இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, டிசி டிசைன் லோகோ பொருத்தப்பட்ட க்ரில், சைடு போர்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்!

உட்புறத்தில்தான் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கைகள் நீக்கப்பட்டு, இரண்டு சொகுசான புஷ் பேக் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. தாராள இடவசதியுடன், உயர் தர லெதர் கவர் செய்யப்பட்டிருப்பதால், மிக சொகுசான பயண அனுபவத்தை இந்த இருக்கைகள் தரும்..

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்!

முன் வரிசை தனியாக பிரிக்கப்பட்டு நடுவில் தடுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், அந்த தடுப்பில் பின்புற பயணிகளின் வசதிக்காக பெரிய அளவிலான டிவி திரை ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்!

சிறிய குளிர்சாதனப் பெட்டி, மடக்கி விரிக்கும் வசதி கொண்ட டேபிள் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கதவுகள், தடுப்பு மற்றும் தரைப்பகுதியில் மர தகடுகள் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்!

சூரிய வெளிச்சத்தை உள்ளே வர விடாமல் தடுப்பதற்கான தானியங்கி முறையில் செயல்படும் திரை மறைப்பு வசதியும் உண்டு. தடுப்பில் பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இருக்கைகளில் இருக்கும் தொடு உணர் பட்டன்கள் மூலமாக பொழுதுபோக்கு சாதனங்கள், இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கஸ்டமைஸ் பேக்கேஜுக்கான விலை குறித்த விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ரூ.4.5 லட்சம் விலையில் இந்த கஸ்டமைஸ் வசதியை டிசி நிறுவனம் செய்து தரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Tuesday, December 18, 2018, 11:34 [IST]
English summary
Mahindra Marazzo Gets DC Design's Custom Treatment.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+