மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் டேஷ்போர்டின் மேற்புற வடிவமைப்பு இன்னோவா காரின் டேஷ்போர்டு டிசைனை ஒத்திருக்கிறது.

By Saravana Rajan

விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நிகரான அம்சங்களுடன் புதிய எம்பிவி ரக காரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. யு321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த புதிய காருக்கு மராஸ்ஸா என்று பெயர் சூட்டியது.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

இந்த நிலையில், இந்த புதிய எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதத்தில், தற்போது இந்த புதிய காரின் டேஷ்போர்டு அமைப்பை காட்டும் இன்டீரியர் படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

இதன் டேஷ்போர்டின் மேற்புற வடிவமைப்பு இன்னோவா காரின் டேஷ்போர்டு டிசைனை ஒத்திருக்கிறது. எனினும், சில மாறுதல்களுடன் தனித்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சென்டர் கன்சோலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பிடித்துள்ளது. அதற்கு கீழே ஏசி கட்டுப்பாட்டு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் சற்று பெரியதாகவும் இரண்டு டயல்களுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு டயல்களுக்கு நடுவில் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டயல்கள் பெரிதாக இருப்பதால், ஓட்டுனர் எளிதாக பார்த்துக் கொள்ள முடியும்.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

மஹிந்திரா மராஸ்ஸா கார் மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மிக உறுதியாக இருக்கும் என்பதுடன், சிறப்பான கையாளுமை மற்றும் சொகுசான பயணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

இந்த கார் சென்னையிலுள்ள மஹிந்திரா வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலியில் உள்ள தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்நது உருவாக்கி இருக்கின்றன. எனவே, இது உலகத் தரம் வாய்ந்த மாடலாக இருக்கும் என்பது கணிப்பு.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

மஹிந்திரா மராஸ்ஸா எஸ்யூவியில் 7 பேர் பயணிப்பதற்கு ஏதுவாக மிகச் சிறப்பான உட்புற இடவசதியுடன் வர இருக்கிறது. இந்த கார் 8 சீட்டர் மாடலிலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும். வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் இன்டீரியர் படம் வெளியீடு!!

ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயாோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா ஆகிய இரண்டு கார்களின் மார்க்கெட்டையும் குறிவைத்து இந்த கார் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 10, 2018, 10:56 [IST]
English summary
Indian automaker Mahindra & Mahindra recently revealed the Marazzo moniker for its upcoming U321 MPV. The Mahindra Marazzo will be a premium offering and will take on the Toyota Innova Crysta. Now, the company has revealed the interior of the Marazzo MPV.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+