முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

வரும் செப்டம்பர் 3ந் தேதி புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த சூழலில், டீலர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கார்கள் வந்துள்ளன.

By Saravana Rajan

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் ஸ்பை படங்கள் மற்றும் வேரியண்ட்டுகளின் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் ஸ்பை படங்களை இந்த செய்தியில் காணலாம்.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

வரும் செப்டம்பர் 3ந் தேதி புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த சூழலில், டீலர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கார்கள் வந்துள்ளன. முதல்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரை முழுமையாக காணும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் முன்புறத்தில் வழக்கம்போல முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகல், வலிமையான பம்பர் அமைப்பு ஆகியவை பிரிமியம் மாடலாகவே தோற்றமளிக்கிறது.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

பக்கவாட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா சாயல் லேசாக தெரிகிறது. இருப்பினும், சில மாற்றங்களுடன் வேறுபடுத்தப்பட்டுள்ளன. சி பில்லர் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு கூரையையும், உடல் அமைப்பையும் தனியாக பிரிக்கும் வகையில் இருக்கிறது. பி, சி பில்லர்கள் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருப்பது வசீகரமாக உள்ளது.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

கூரை பின்னோக்கி தாழ்ந்து செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் காரின் உருவத்துக்கு இயைந்து போகும் அளவுக்கு பெரிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற கதவில் இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் விதத்தில் வலிமையான க்ரோம் பட்டையும், அதில் நடுநாயகமாக மஹிந்திரா லோகோவும் இடம்பெற்றுள்ளன.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பின்னர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வர இருக்கிறது. பெட்ரோல் மாடல் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியான விஷயம்தான்.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பவி காரின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணக் கலவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு முழுவதுமாக கருப்பு வண்ம தீம் கொண்டதாக இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரூஃப் ஏசி வசதிகள் உள்ளன.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணம்போல் தேர்வு செய்வதற்கு ஏதுவான சிறந்த வண்ண தேர்வுகளில் வருவதும் தெரிய வந்துள்ளது. இனி வேரியண்ட் விபரங்களை பார்க்கலாம்.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் M2, M4, M6 மற்றும் M8 ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டுகளில் உள்ள விபரங்களை தனித்தனியாக காணலாம்.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

மஹிந்திரா மராஸ்ஸோ M2

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் குறைவான விலை கொண்ட பேஸ் வேரியண்ட் மாடலாக M2 விற்பனை செய்யப்பட இருக்கிறது. எஞ்சின் இம்மொபைலைசர், ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், சென்ட்ரல் லாக்கிங், 12V சார்ஜர், பவர் விண்டோஸ், டிஜிட்டல் கடிகாரம், பின் இருக்கை பயணிகளுக்கு யுஎஸ்பி சார்ஜர், ரூஃப் ஏசி, மேனுவல் ஏசி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

மஹிந்திரா மராஸ்ஸா M4

பேஸ் மாடலைவிட சற்று கூடுதல் வசதிகள் கொண்ட இந்த மாடலில் கூடுதலாக ஃபுல் வீல் கவர், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, சுறா துடுப்பு ஆண்டென்னா, வாய்மொழியாக குறுந்தகவல் அனுப்பும் வசதி, ரியர் வைப்பர் மற்றும் வாஷர், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் ரியர் வியூ மிரர்கள் போன்ற வசதிகள் உள்ளன.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

மஹிந்திரா மராஸ்ஸோ M6

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் ஓரளவு வசதிகள் நிரம்பிய நடுத்தர வகை வேரியண்ட்டாக இருக்கும். இந்த வேரியண்ட்டில் முன்புறத்திலும், பின்புறத்திலும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. 16 அங்குல அலாய் வீல்கள், கார்னரிங் லைட்டுகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஃபாலோ மீ ஹோம் லைட் இடம்பெற்றுள்ளது. முன் இருக்கைகளுக்கு லம்பார் சப்போர்ட் கொடுக்கப்டுகிறது. ரிமோட் கீலெஸ் என்ட்ரி வசதி, சன்கிளாஸ் ஹோல்டர், சைடு வேனிட்டி மிரர்கள், 7 அங்குல தொாடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, ஸ்டீயரிங் வீலில் சுவிட்சுகள், அவசர அழைப்பு வசதி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

மஹிந்திரா மராஸ்ஸோ M8

அதிகபட்ச வசதிகள் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனைக்கு வருகிறது. மேற்சொன்ன வேரியண்ட்டுகளில் இருந்த வசதிகளுடன் கூடுதலாக எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இரண்டு யுஎஸ்பி சாக்கெட்டுகள் இடம்பெறுகின்றன. லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, கூல்டு கிளவ் பாக்ஸ், படூல் விளக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, ரிவர்ஸ் கேமரா, பவர் ஃபோல்டிங் ரியர் வியூ மிரர்கள் இடம்பெற இருக்கின்றன.

முதல்முறையாக முழுமையாக காட்சி தந்த மஹிந்திரா மராஸ்ஸோ!!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் ரூ.9 லட்சம் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. இது மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பலாம்.

Source: Team BHP And AutocarIndia

More from DriveSpark

Article Published On: Friday, August 31, 2018, 11:03 [IST]
English summary
Mahindra & Mahindra is all set to launch the Marazzo MPV in the Indian market on September 3, 2018. Ahead of that the Mahindra Marazzo has been fully revealed.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+