TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகமாகிறது!
மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
எம்பிவி கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த அம்சங்களுடன் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருக்கிறது. மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இடையிலான பட்ஜெட்டில் வந்திருக்கும் இந்த கார் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
மஹிந்திரா மராஸ்ஸோ காரில் 121 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகமானது. ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே ஆப்ஷனாக இருக்கிறது. இந்த சூழலில், மஹிந்திரா மராஸ்ஸோ காரின் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மாருதி, டாடா கார்களுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸுகளை சப்ளை செய்து வரும், இத்தாலியை சேர்ந்த மேக்னட்டி மரெல்லி நிறுவனம்தான் புதிய மஹிந்திரா மராஸ்ஸோவுக்கான 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸையும் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் பெட்ரோல் மாடலிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டால், அது நிச்சயம் சிறந்த தேர்வாக அமையும்.
சுறா மீனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படும் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் ஏராளமான சிறப்பு அம்சங்களை ஏற்கனவே தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த காரில் சுறா மீன் பற்கள் போன்ற க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் இருக்கின்றன.
உட்புறம் மிக பிரிமியமான அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் இடம்பெற்றுள்ளது. 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரூஃப் ஏசி வென்ட்டுகள், மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், விமானத்தில் இருப்பது போன்ற ஹேண்ட் பிரேக் லிவர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். மூன்றாவது வரிசை இருக்கையானது எர்டிகாவை விட சற்று மேம்பட்ட இடவசதியை அளிக்கும். இரண்டு ஏர்பேக்குகள், டிஸ்க் பிரேக் சிசஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, எமர்ஜென்ஸி கால் வசதிகளை பெற்றிருக்கிறது.
பெட்ரோல் மாடல் அறிமுகத்தின்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உடனடியாக ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் வரும் என எதிர்பார்க்க முடியாத நிலை இருக்கிறது. 2020ம் ஆண்டு வாக்கில்தான் மராஸ்ஸோவின் பெட்ரோல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வினை பெறும் என்று கருதப்படுகிறது.
Source: Autocar India