மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

கடந்த செப்டம்பர் மாதம் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் களமிறக்கப்பட்டது. அப்போதே, அது அறிமுகச் சலுகை வி

அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

கடந்த செப்டம்பர் மாதம் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் களமிறக்கப்பட்டது. மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

அறிமுகம் செய்யப்படும்போதே, ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலை என்பது அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜனவரி 1ந் தேதி முதல் மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை உயர்த்தப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கார் சரியான விலையில் களமிறக்கப்பட்டதால், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் 10,000க்கும் அதிகமான முன்பதிவுகளை முதல் இரண்டு மாதங்களில் பெற்றிருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில் 2,829 மராஸ்ஸோ கார்களும், இரண்டாவது மாதமான அக்டோபரில் 3,810 மராஸ்ஸோ கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. புதிய மாருதி எர்டிகா கார் வருகை தர இருப்பதால், கடந்த மாதம் எர்டிகா காரின் விற்பனை கணிசமாக குறைந்தது. இதனால், மராஸ்ஸோ காரின் விற்பனையில் உயர்வு ஏற்பட்டதாக தெரிகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வந்த பிறகு, மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் M2, M4, M6 மற்றும் M8 ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அண்மையில் ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

புதிய மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!

எம்பிவி கார் ரகத்தில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது புதிய மஹிந்திரா மராஸ்ஸோ. விரைவில் விலை உயர்த்தப்பட இருப்பதால், இப்போதே முன்பதிவு செய்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 17, 2018, 11:21 [IST]
English summary
Mahindra & Mahindra (automotive division) has announced a hike in prices for their Marazzo MPV. The Mahindra Marazzo prices will be increased by around Rs 30,000 to Rs 40,000 and will be effective from the 1st January 2019.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+