மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் புதிய எஸ்-9 வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கார்னரிங் ஹெட்லைட் வசதியுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு தக்கவாறு சிறந்த தேர்வை அளிக்கும் விதத்தில், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் எஸ்-9 என்ற புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எஸ்-11 என்ற டாப் வேரியண்ட்டுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய வேரியண்ட்டில் கார்னரிங் ஹெட்லைட் வசதியுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்இடி கெய்டு லைட்டுகள், ஹைட்ராலிக் சிஸ்டத்தில் திறக்கும் பானட், டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்ட சைடு மிரர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம் போன்ற வசதிகளை பெற்றிருக்கிறது.

உட்புறத்தில் 5.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10 மொழிகளில் தகவல்களை தரும் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், முழுமையான தானியங்கி வெப்பநிலை கட்டுப்படுத்தும் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்9 வேரியண்ட்டில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக 4 சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்-9 வேரியண்ட்டில் டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், திருடு போவதை தவிர்க்கும் ஆன்ட்டி தெஃப்ட் வார்னிங் சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலசர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் குஷன் சஸ்பென்ஷன் மற்றும் ஆன்ட்டி ரோல் தொழில்நுட்பங்கள் உள்ளன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் எஸ்-9 வேரியண்ட் ரூ.13.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக.


Click it and Unblock the Notifications