இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் பல சிறந்த கார் மாடல்களை கைவசம் வைத்திருந்தும் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சியை எட்டவில்லை. இதனையடுத்து, விற்பனையை அதிகரிக்கவும், தயாரிப்பு செலவீனத்தை குறைக்கவு

மஹிந்திரா டீலர்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விற்பனை துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த செய்தி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் பல சிறந்த கார் மாடல்களை கைவசம் வைத்திருந்தும் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சியை எட்டவில்லை. இதனையடுத்து, விற்பனையை அதிகரிக்கவும், தயாரிப்பு செலவீனத்தை குறைக்கவும் மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

அதன்படி, மஹிந்திராவின் எஸ்யூவி தயாரிப்பு பிளாட்ஃபார்மின் அடிப்படையில் புதிய எஸ்யூவி மாடலை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இந்தியாவுக்காக பிரத்யேக கார் மாடல்களை தயாரிப்பதற்கான செலவீனத்தை கணிசமாக குறைக்கும் வாய்ப்பு ஃபோர்டு நிறுவனத்துக்கு கிடைக்கும்.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

இந்த நிலையில், இந்த கூட்டணி புதிய திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது. அதாவது, ஃபோர்டு கார்களை மஹிந்திரா டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டு இருப்பதாக லைவ்மின்ட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

முதலாவதாக, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை விற்பனை செய்யும் பொறுப்பை தனது டீலர்கள் மூலமாக மஹிந்திரா துவங்கி இருக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக மஹிந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

இதனைத்தொடர்ந்து, பிற ஃபோர்டு கார்களையும் மஹிந்திரா டீலர்கள் மூலமாக விற்பனை செய்யும் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. பெரு நகரங்கள் தவிர்த்து, மூன்றாம் நிலை மற்றும் சிறிய நகரங்களிலும் ஃபோர்டு கார்களுக்கான வர்த்தகம் விரிவுப்படுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

அதேபோன்று, மஹிந்திரா டீலர்களுக்கு ஃபோர்டு கார்களை விற்பனை செய்வதன் மூலமாக அதிக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, 15 நகரங்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலர்கள் விற்பனை செய்கின்றனர்.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

அடுத்ததாக, புதிய கார்களை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளன. இதனால், தயாரிப்பு செலவீனத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதோடு, மிக சரியான விலையில் கார்களை விற்பனைக்கு கொண்டு வர முடியும். இதனால், சந்தைப் போட்டியை எதிர்கொள்வதற்கான வழி ஏற்படும்.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் பேட்டரியில் இயங்கும் கார்களும் தயாரிக்கப்பட இருக்கின்றன. முதலாவதாக, ஃபோர்டு ஆஸ்பயர் காரின் மின்சார மாடல் உருவாக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் இந்த புதிய மின்சார கார் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புள்ளது.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

மேலும், மஹிந்திரா உருவாக்கி வரும் பாரத் ஸ்டேஜ் - 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய பெட்ரோல் எஞ்சினும் புதிய ஃபோர்டு எஸ்யூவி மாடலில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவி அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

இதுதவிர்த்து, கார்களுக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான சாஃப்ட்வேர்கள் மற்றும் மொபைல்போன் செயலிகளை இணைந்து உருவாக்குவதற்கும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. இதன்மூலமாக, மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் போன்ற பெரிய கார் நிறுவனங்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்பாகவும், ஊரக பகுதிகளிலும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கும் முடியும் என்று இந்த இரண்டு நிறுவனங்களும் கருதுகின்றன.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரில் பார்த்தால், ஆச்சர்யம் கொள்ள தேவையில்லை. மஹிந்திரா டீலரிலும் இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை வாங்க முடியும்.

இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை மஹிந்திரா டீலரிலும் வாங்கலாம்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கார், பைக் குறித்த செய்தி, படங்கள், வீடியோ மற்றும் உங்களது கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள நினைத்தால் கீழே உள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும். தணிக்கைக்கு பிறகு பிரசுரிக்கப்படும். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் உதவி ஆசிரியர் மற்றும் வீடியோ எடிட்டராக பணிபுரிய விரும்புபவர்களும் உங்களது சுய விபரத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

Email ID: [email protected]

Article Published On: Friday, December 7, 2018, 11:06 [IST]
English summary
According to media reports, Mahindra Starts Selling Ford Cars In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+