மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த, மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன் மாடலின் விலை விபரம் வெளியாகி இருக்கிறது. ரூ.13.80 லட்சம் கூடுதல் கட்டணத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் கிட்டை பெற ம

By Saravana Rajan

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் மஹிந்திரா நிறுவனம் பல கான்செப்ட் மாடல்களை காட்சிக்கு வைத்திருந்தது. அதில், பலரின் கவனத்தை வெகுவாக கவர்ந்த மாடல், தார் எஸ்யூவியின் வாண்டர்லஸ்ட் எடிசன் என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த விசேஷமான கான்செப்ட் மாடல்.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

2016ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டேபிரேக் கான்செப்ட் மாடலிலிருந்து பல டிசைன் தாத்பரியங்கள் இந்த வாண்டர்லஸ்ட் எடிசனிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. வெளிப்புறம் எலக்ட்ரிக் புளூ என்ற விசேஷ நீல வண்ண பெயிண்ட் செய்யப்ப்டடு இருக்கிறது.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

புதிய முகப்பு பேனல்கள் தார் எஸ்யூவியை மாடர்னாக்கி இருக்கிறது. இந்த எஸ்யூவியில் கல்விங் எனப்படும் மேல்நோக்கி திறக்கும் தனித்துவமான கதவுகள் உள்ளன. தார் வாண்டர்லஸ்ட் எடிசனில் முக்கிய விஷயமாக 33 அங்குல டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இது தார் எஸ்யூவியை மிக பிரம்மாண்டமாகவும், மிரட்டலாகவும் மாற்றி இருக்கிறது.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

புதிய அலுமினிய வண்ண க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், கூரையில் அமைக்கப்பட்ட ரியர் வியூ மிரர்கள், இரட்டை புகைப்போக்கிகள், பானட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஹை லிஃப்ட் ஜாக் , கூடுதல் எரிபொருள் எடுத்துச் செல்வதற்கான ஜெர்ரி கேன்கள் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

இந்த காரில் ஹார்டு டாப் பொருத்தப்பட்டிருப்பதால், ஆஃப்ரோடுகளின்போது ஓட்டுனர், பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கும். இந்த எஸ்யூவியில் பயனீர் மியூசிக் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, தொடுதிரை சாதனம் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

இந்த எஸ்யூவியில் உட்புறத்தில் பீஜ் வண்ண பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்பார்கோ பிராண்டின் ரேஸிங் இருக்கைகளும், லெதர் கவருடன் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுவும் உட்புறத்தில் மிக முக்கிய அம்சங்கள்.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

தார் வாண்டர்லஸ்ட் எடிசனில் 2.5 லிட்டர் சிஆர்டிஇ டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2 வீல் டிரைவ் அல்லது 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களில் தேர்வு உள்ளது.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

பின்புற ஆக்சிலில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்சியல் நுட்பமும், லோ மற்றும் ஹை ரேசியோ அமைப்பில் எஞ்சின் பவரை கடத்தும் டிரான்ஸ்ஃபர் கேஸும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், சிறந்த ஆஃப்ரோடு வாகனமாக இருக்கிறது.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன் மாடலானது கான்செப்ட் எனப்படும் மாதிரி மாடலாகவே இருந்தது. பொதுவாக இதுபோன்ற மாடல்கள் கான்செப்ட் நிலையுடன் நின்றுவிடும். ஆனால், மஹிந்திரா நிறுவனம் இதனை வாடிக்கையாளர்கள் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

ஆம். மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எஸ்யூவியை வாங்க விரும்புவோர்கள் தார் எஸ்யூவியின் சிஆர்டிஇ டீசல் எஞ்சின் மாடலை வாங்கி கொடுப்பதுடன், மாடிஃபிகேஷன் பணிகளுக்காக ரூ.13.80 லட்சத்தை கூடுதலாக செலுத்த வேண்டும்.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

மும்பையில் உள்ள மஹிந்திரா கஸ்டமைசேஷன் மையத்தில் மட்டுமே இந்த தார் வாண்டர்லஸ்ட் எடிசன் மாறுதல்கள் செய்து தரப்படுகிறது. மஹிந்திரா டீலர்களில் இந்த பணி செய்யப்படுவதில்லை. இந்த பணிகளை செய்து கொடுப்பதற்கு 3 முதல் 6 மாதங்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர்.

மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன்... மயக்கம் போட வைக்கும் விலை!!

வரிகள் உள்பட மஹிந்திரா தார் வாண்டர்லஸ்ட் எடிசன் மாடலை கஸ்டமைஸ் செய்து பெறுவதற்கு காரின் விலை மற்றும் கஸ்டமைஸ் பணிகளுக்காக மொத்தமாக ரூ.20 லட்சத்திற்கும் மேல் வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, April 27, 2018, 17:45 [IST]
English summary
Mahindra Thar Wanderlust edition price details revealed.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+