மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிக்கு அட்டகாசமான ஆக்சஸெரீகள் பேக்கேஜ் அறிமுகம்!
மஹிந்திரா டியூவி300 லக்சுரி எடிசன் என்ற பெயரில் இந்த விசேஷ ஆக்சஸெரீ பேக்கேஜ் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆக்சஸெரீகள் பேக்கேஜ் விபரம் மஹிந்திரா இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் 7 சீட்டர் மாடல் என்ற அந்தஸ்துடன் போட்டி போடுகிறது மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி. இந்த நிலையில், டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாக கூடுதல் ஆக்சஸெரீகள் கொண்ட விசேஷ கிட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா டியூவி300 லக்சுரி எடிசன் என்ற பெயரில் இந்த விசேஷ ஆக்சஸெரீ பேக்கேஜ் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆக்சஸெரீகள் பேக்கேஜ் விபரம் மஹிந்திரா இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் டி8 வேரியண்ட்டிற்கு மட்டுமே இந்த லக்சுரி எடிசன் கிட் வழங்கப்படுகிறது. லக்சுரி எடிசன் கிட் -1 என்ற பேக்கேஜில் ஃபாக்ஸ் லெதர் சீட் கவர்கள், பீஜ் வண்ண ஸ்டீயரிங் வீல் கவர் வழ்கப்படுகிறது. இந்த கிட்டில் 6.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. நேவிகேஷன் வசதி மற்றும் ரிவர்ஸ் கேமராவும் உள்ளன.

மேற்கண்ட வசதிகள் தவிர்த்து, ரியர் வியூ மிரர்களுக்கான க்ரோம் அலங்கார பாகங்கள், முன்பக்கத்திற்கு கூடுதல் க்ரில் அமைப்பு, கைப்பிடிகளும் வழங்கப்படுகின்றன. இதுதவிர, மேலும் சில கூடுதல் ஆக்சஸெரீகளும் உண்டு.

லக்சுரி எடிசன் கிட் -2 ல் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே சாதனம், பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண கூரை, பானட்டிற்கான விசேஷ ஸ்டிக்கர் போன்றவை வழங்கப்படுன்றன. இது காரின் தோற்றத்தை படு கவர்ச்சியாக காட்டும்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியை வாங்கும் வாடிக்கையாளர்கள் டீலர்களில் இந்த லக்சுரி எடிசன் கிட்டை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளளாம். இந்த கூடுதல் ஆக்சஸெரீகளால் மஹிந்திரா டியூவி300 காரின் வாரண்டியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

புதிய இன்ஃபோடெயின்மென்ட்சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் விஷயமாக இருக்கும். வெளி மார்க்கெட்டில் எக்ஸ்ட்ரா ஆக்சஸெரீகளை வாங்குவதை தவிர்த்து, ஒரிஜினல் ஆக்சஸெரீகளை பெறும் வாய்ப்பாகவும் இது அமையும். விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை மஹிந்திரா டீலர்களை தொடர்பு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








