மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

முதல்முறையாக மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரீயர் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. முதல் வரிசை, இரண்டாவது வரிசை இருக்கைகள் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கின்றன. மூன்றாவது வரிசை இருக்கைகள் சி

By Saravana Rajan

முதல்முறையாக மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரீயர் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் சிறந்து விளங்கும் மஹிந்திரா நிறுவனம் விரைவில் புத்தம் புதிய எம்பிவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. யு321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எம்பிவி கார் மிக நீண்டகாலமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரின் ஸ்பை படங்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

அந்த ஸ்பை படங்களில் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் ஓரளவு அனுமானிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில இன்டீரியர் படங்கள் வெளியானாலும், அவை தெளிவாக இல்லை. இந்த சூழலில், முதல்முறையாக மஹிந்திரா எம்பிவி காரின் தெளிவான இன்டீரியர் படங்கள் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

இதில், முன்புற டேஷ்போர்டு அமைப்பு, இருக்கைகள் தெளிவாக பார்க்க முடிகிறது. அதேபோன்று, இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளையும் நன்றாகவே பார்க்கும் வாய்ப்பு இந்த படங்கள் மூலமாக கிடைத்துள்ளது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

முதல் வரிசை, இரண்டாவது வரிசை இருக்கைகள் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், மூன்றாவது வரிசை இருக்கைகள் சிறியவர்கள் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கும். இரண்டு பெரியவர்கள் அமர்ந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் கூட சவுகரியமாக இருக்காது என்று தெரிகிறது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகள் 60:40 என்ற விகிதத்தில் மடக்கும் வசதியை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, கூடுதல் பொருட்களை வைத்து செல்வதற்கான வாய்ப்பையும் வழங்கும். இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு போட்டியாக பார்க்கப்படும் இந்த காரில் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் MID எனப்படும் தகவல் பெறும் மின்னணு திரை சற்று அளவில் பெரிதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இருப்பதும் தெரிந்து கொள்ள முடிகிறது.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

புதிய மஹிந்திரா யு321 எம்பிவி காரில் 1.6 லிட்டர் எம்-ஃபால்கன் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. சாங்யாங் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த புதிய எஞ்சினை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎச்பி பவரையும், 305 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த புதிய கார் வரும் என்பது தகவல்.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், அலாய் வீல்கள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, கூரையின் உட்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிமியம் ஆக்சஸெரீகளை பெற்றிருக்கும்.

மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது!

தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா ஆகிய இரண்டு கார்களின் மார்க்கெட்டை மையமாக வைத்து இந்த புதிய எம்பிவி காரை நிலைநிறுத்தப்படும். ரூ.9 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: MotorOctane

More from DriveSpark

Article Published On: Wednesday, May 16, 2018, 17:00 [IST]
English summary
Mahindra & Mahindra has been testing its new U321 MPV on Indian roads for quite some time. Now, MotorOctane has got hold of the interior images of the U321 MPV. The new images of the Mahindra U321 MPV also reveal both the second and third-row seats.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+