மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

வாடிக்கையாளர் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் அதிக விலை கொண்ட W11(O) வேரியண்ட்டுக்குத்தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

By Saravana Rajan

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் குறிப்பிட்ட வேரியண்ட்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வேரியண்ட் விபரம், அதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

கடந்த மாதம் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதுப்பொலிவுடன் இந்த இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு மிகச் சிறப்பாக உள்ளதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு டீலரிலும் சராசரியாக 35 எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார்களுக்கு முன்பதிவு பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மெட்ரோ நகரங்கள் தவிர்த்து இரண்டாம் நிலை நகரங்களிலும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு 8 ஆக இருந்த முன்பதிவு இருமடங்கு உயர்ந்து 15 யூனிட்டுகளுக்கு முன்பதிவு கிடைத்து வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

மேலும், வாடிக்கையாளர் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் அதிக விலை கொண்ட W11(O) வேரியண்ட்டுக்குத்தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வேரியண்ட்டில் 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

இந்த எஞ்சின் 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. பழைய மாடலைவிட அதிக செயல்திறன் மிக்கதாக எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் W11(O) வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.16.68 லட்சத்திலும், ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.17.88 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W11(O)வேரியண்ட்டில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த மாடலில் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் சன்ரூஃப் இடம்பெற்றுள்ளது. புளூடூத் மூலமாக ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும். பாக்கெட்டில் சாவியை வைத்துக் கொண்டு புஷ் பட்டன் மூலமாக எஞ்சினை ஆன், ஆஃப் செய்யும் வசதியுடன், காருக்கு அருகில் வரும்போது கதவுகள் தானாக திறக்கும் பாஸிவ் கீ லெஸ் என்ட்ரி வசதியும் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

இந்த எஸ்யூவியில் பிரேக் பிடிக்கும்போது, ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் கார் செல்லும்போதும் ஆல்டர்நேட்டர் கருவி மூலமாக மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும். இதன்மூலமாக, எஞ்சினுக்கான சுமை குறைக்கப்பட்டு, கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். இதனை பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் தொழில்நுட்ப வசதி என்று குறிப்பிடப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லை. இந்த டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதி, ரோல் ஓவர் புரொடெக்ஷன் வசதிகள் உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க டிமாண்ட்!

இந்த கார் கிரிம்ஸன் ரெட், மிஸ்ட்டிக் காப்பர் என்ற இரண்டு புதிய வண்ணங்களில் வந்துள்ளது. தவிர, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஒபுலன்ட் பர்ப்புள், வல்கானோ பிளாக், லேக் சைடு பிரவுன், பியர்ல் ஒயிட் மற்றும் மூட்டஸ்ட் சில்வர் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 30, 2018, 11:53 [IST]
English summary
Mahindra launched the new generation XUV500 in April 2018. According to reports from Autocar India, the top end spec W11(O) variant of the XUV500 currently has been receiving the highest demand.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+