மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

வரும் 24ந் தேதி புதிய மஹிந்திரா அல்டூராஸ் பிரிமீயம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாங்யாங் ரெக்ஸ்டன் ஜி4 எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக மஹிந்திரா பிராண்டில் வர இருக்கிறது.

அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில், புதிய மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

வரும் 24ந் தேதி புதிய மஹிந்திரா அல்டூராஸ் பிரிமீயம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாங்யாங் ரெக்ஸ்டன் ஜி4 எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக மஹிந்திரா பிராண்டில் வர இருக்கிறது.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

பழைய ரெக்ஸ்டன் எஸ்யூவியிலிருந்து முற்றிலும் புதிய மாடலாகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த பிரிமீயம் எஸ்யூவி அல்டூராஸ் ஜி4 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

மேலும், வழக்கமான மஹிந்திரா எஸ்யூவி கார்களை போல அல்லாமல் பல புதிய மாற்றங்களை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியின் முகப்பில் படுக்கை வாட்டு சட்டங்களுடன் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. நடுவில் மஹிந்திரா பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. அழகாக செதுக்கப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர், புரொஜெக்டர் வகை விளக்குகள், பிரம்மாண்ட பம்பர் அமைப்பு, ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்த எஸ்யூவியில் வலிமையான ஷோல்டர் எஸ்யூவிக்கு உரிய பிரம்மாண்டத்தை கொடுக்கிறது. மேலும், 18 அங்குல 5 ஸ்போக் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் ரகத்திலேயே மிக நீளமான மாடலாக வருவதால் பக்கவாட்டிலும் பிரம்மாண்ட எஸ்யூவி மாடலாக இருக்கிறது.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

பின்புறத்தில் சிறிய ஸ்பாய்லர், ஷோல்டர் லைனில் இணைந்து நிற்கும் கச்சிதமான டெயில் லைட் க்ளஸ்ட்டர், நேர்த்தியான பம்பர் அமைப்பு ஆகியவை இந்த எஸ்யூவியை மிடுக்காக காட்டுகிறது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கி வைக்கும் முடியும் என்பதால், அதிக பூட்ரூம் இடவசதியை பெறலாம்.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

உட்புறத்தில் கருப்பு வண்ண தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு டிசைன் கவர்வதாக இருப்பதுடன், உட்புறத்தில் மிக பிரிமீயமாக காட்சி தருகிறது. இந்த எஸ்யூவியில் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இதுவரை கிடைத்த ஸ்பை படங்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருப்பது மட்டுமே தெரிகிறது. எனவே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வரும் என்ற கணிப்பு இருக்கிறது. எனினும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா அல்டூராஸ் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

புதிய மஹிந்திரா அல்டூராஸ் ஜி4 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Article Published On: Thursday, November 8, 2018, 14:37 [IST]
English summary
New Mahindra XUV 700 spy pics show both exteriors and interiors with almost no camouflage. Mahindra is all set to launch the new XUV 700 premium seven-seater SUV, codenamed the Y400, on November 24, 2018. The Mahindra XUV 700 or Y400 SUV was spotted many times recently and it is based on the global SsangYong G4 Rexton.
மேலும்... #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+