மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியானது S-201 என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி XUV300 என்ற பெயரில் சந்தைக்கு வர இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரமும், படங்களும் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மினி எக்ஸ்யூவி500 எஸ்யூவியாக வரும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவியானது S-201 என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி XUV300 என்ற பெயரில் சந்தைக்கு வர இருக்கிறது. இந்த எஸ்யூவியின் படங்களும் இன்று பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. அதில், தோற்றத்தில் இது மினி எக்ஸ்யூவி500 போன்று டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

சாங்யாங் டிவோலி எஸ்யூவியானது சிறிய டிசைன் மாற்றங்களுடன் ரீபேட்ஜ் செய்யப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எஸ்யூவி பல்வேறு விதத்திலும் டிசைன் மாற்றங்களுடன் மினி எக்ஸ்யூவி500 எஸ்யூவி போல மாற்றப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

சிறப்பாக டிசைன் செய்யப்பட்ட மஹிந்திரா எஸ்யூவியாக போற்றப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற க்ரில் அமைப்பு, ஹெட்லைட், டி பில்லர் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் மடிப்பு ஆகியவை இந்த புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவியை மினி எக்ஸ்யூவி500 என்ற சொல்லத் தோன்றுகிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த எஸ்யூவியில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏர்டேம் மற்றும் பம்பர் அமைப்பு மாறுபடுகிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த எஸ்யூவியில் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், கருப்பு வண்ண சைடு மிரர்கள், கருப்பு வண்ண டி பில்லட் ஆகியவை சிறப்பான தோற்றத்தை தருகின்றன.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

பின்புறத்தில் மிக நேர்த்தியான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், க்ரோம் ஸ்கிட் பிளேட்டுகள், கருப்பு வண்ண பம்பர் ஆகியவை எஸ்யூவிக்கு காருக்குரிய மிடுக்கை தருகிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் இரட்டை வண்ண டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோல் கூட எக்ஸ்யூவி500 போன்று நீர்வீழ்ச்சி போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் ஸோன் ஏசி சிஸ்டம் ஆகியவை இந்த ரகத்தில் முதல்முறையாக வர இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

எஞ்சின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. பெட்ரோல் மாடலில் 120 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 123 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் எஞ்சினும் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. முதலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வருகிறது.

மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

பிப்ரவரியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.மஹிந்திராவின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சம் இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 19, 2018, 15:12 [IST]
English summary
Mahindra XUV300 Compact SUV Officially Revealed.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+