புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்... என்னத்த சொல்ல?
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளியாகி இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் காணலாம்.

வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டிசைனுக்கு பெயர் பெற்ற இந்த எஸ்யூவியை மஹிந்திரா எவ்வாறு மாற்றி இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு நிரம்பவே இருக்கிறது.

இந்த சூழலில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. முகப்பு க்ரில் அமைப்பும், பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டரும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால், எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை என்றே கருதப்படுகிறது. குறிப்பாக, பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டர் தற்போதைய மாடலில் இருக்கும் அளவுக்கு கம்பீரத்தை தரவில்லை.

ஆனால், போக போக இந்த டிசைன் வாடிக்கையாளர்கள் மனதில் இடம்பிடிக்கும் என்று கூறலம். பம்பர் அமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. க்ரோம் பட்டை அரணுடன் கூடிய பிரம்மாண்டமான முகப்பு க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டெயில் லைட் முக்கோண வடிவில் மாறி இருப்பதுடன், நம்பர் பிளேட்டுக்கு மேலே புதிய க்ரோம் பட்டை மற்றும் அதன் நடுவில் மஹிந்திரா லட்சினை பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டாப் லைட்டுடன் இணைந்த ரூஃப் ஸ்பாய்லர், ரியர் வைப்பர் மற்றும் டீஃபாகர் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

தற்போது பயன்படுத்தப்படும் அதே 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆம், இந்த எஞ்சின் 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவி ஜி9 பெட்ரோல் எஞ்சின் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

இன்டீரியர் குறித்த அதிக தகவல்கள் இல்லை. எனினும், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். இது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். இது வாடிக்கையாளர்களை கவரக்கூடிய விஷயமாக இருக்கும். புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விலை விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








