புதிய குறியீட்டுப் பெயரில் காட்சிக்கு வந்த மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி!!

மஹிந்திராவின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வளாகத்தில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி Y400 என்ற குறியீட்டுப் பெயருடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. உற்பத்தி செல்வதற்கான தயார் நிலையில் உள்ள மாட

By Saravana Rajan

சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் தனது ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்ட சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை நேரடியாக தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மஹிந்திரா.

புதிய குறியீட்டுப் பெயரில் காட்சிக்கு வந்த மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி!!

பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி விற்பனைக்கு வர கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது.

புதிய குறியீட்டுப் பெயரில் காட்சிக்கு வந்த மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி!!

இந்த நிலையில், மஹிந்திராவின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வளாகத்தில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி Y400 என்ற குறியீட்டுப் பெயருடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. உற்பத்தி செல்வதற்கான தயார் நிலையில் உள்ள மாடலாக காட்சி தந்தது இந்த புதிய எஸ்யூவி.

புதிய குறியீட்டுப் பெயரில் காட்சிக்கு வந்த மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி!!

மஹிந்திரா நிறுவனத்தின் பாரம்பரிய முகப்பு க்ரில் அமைப்பு, புதிய அலாய் வீல்கள் உள்ளிட்ட சில மாற்றங்களுடன் இந்த சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி காட்சி தந்தது. ஒட்டுமொத்த தோற்றத்தில் லோகோ, க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள் தவிர்த்து பெரிய மாற்றங்கள் இல்லை.

புதிய குறியீட்டுப் பெயரில் காட்சிக்கு வந்த மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி!!

இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. போட்டியாளர்களைவிட சிறப்பான உட்புற இடவசதியை இந்த எஸ்யூவி அளிக்கும் என்று தெரிகிறது. மிக தரமான உட்புற பாகங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வருகை தர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய குறியீட்டுப் பெயரில் காட்சிக்கு வந்த மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய குறியீட்டுப் பெயரில் காட்சிக்கு வந்த மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி!!

புதிய மஹிந்திரா பிரிமியம் எஸ்யூவியில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 9 ஏர்பேக்குகள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில் அசிஸ்ட், விண்ட்ஸ்க்ரீன் டீஃபாகர், ஆக்டிவ் ரோல்ஓவர் புரொடெக்ஷன் உள்ளிட்ட சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய குறியீட்டுப் பெயரில் காட்சிக்கு வந்த மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி!!

மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற ஜாம்பவான் எஸ்யூவிகளுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும். ஆனால், இந்த செக்மென்ட்டில் மிக சவாலான விலையில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source:CNBCTV18

More from DriveSpark

Article Published On: Wednesday, August 8, 2018, 14:17 [IST]
English summary
Mahindra & Mahindra revealed its new premium SUV based on the Ssangyong Rexton at the Auto Expo 2018. The SUV has been spotted on Indian roads and it could be named as XUV700. Ahead of that, the company has showcased the new flagship SUV with Y400 moniker.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+