மஹிந்திரா ஒய்-400 பிரிமியம் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!!
வரும் அக்டோபர் 9ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பிரிமியம் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த காரில் 187 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் டர்ப
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பிரிமியம் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் தனது பிராண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். கடந்த பிப்ரவரியில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எஸ்யூவி சில மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த சூழலில், அடுத்த மாதம் 9ந் தேதி இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியைவிட விலை அதிகமான ரகத்தில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

அதாவது, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட பிரிமியம் ரக எஸ்யூவி மாடல்களுடன் இந்த எஸ்யூவி போட்டி போடும். பழைய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட டிசைனில் மிக பிரம்மாண்ட மாடலாக வர இருக்கிறது.

மேலும், வெளிநாடுகளில் இருக்கும் புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியிலிருந்து சிறிய மாறுதல்கள் மற்றும் மஹிந்திரா பேட்ஜ் பொருத்தப்பட்டு புதிய மாடலாக வர இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், மஹிந்திரா நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் க்ரில் அமைப்பு, அழகான அலாய் வீல்கள், நேர்த்தியான பின்புற அமைப்புடன் பிரம்மாண்டம் காட்டுகிறது.

மஹிந்திரா ஒய்-400 எஸ்யூவியின் உட்புறம் மிக பிரிமியமாகவும், தரமான உதிரிபாகங்களுடன் காட்சி தருகிறது. இந்த எஸ்யூவியில் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். 360 டிகிரி கேமரா, 7 அங்குல எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் நெப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மஹிந்திரா ஒய்- 400 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனிலும் வருகிறது.

இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ப இந்த எஸ்யூவியின் சஸ்பென்ஷனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா ஒய்-400 எஸ்யூவியானது ரூ.24 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட குறைவான விலை மற்றும் நிறைவான தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிக ஆவல் எழுந்துள்ளது.
Source: Autocar India
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய மராஸ்ஸோ காரின் புகைப்பட தொகுப்பு கீழே...


Click it and Unblock the Notifications








