எஸ்யூவி கார்களுக்கு ரூ.8 லட்சம் வரை மெகா தள்ளுபடி.. கனவை நனவாக்க இதுவே சரியான நேரம்..
அதிக உறுப்பினர்களை உள்ளடக்கிய பெரிய குடும்பத்தை கொண்டவர்களும், அடிக்கடி லாங் டிரிப் அடிக்க விரும்புபவர்களும் தேர்வு செய்வது எஸ்யூவி கார்களைதான். இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால், வி
அதிக உறுப்பினர்களை உள்ளடக்கிய பெரிய குடும்பத்தை கொண்டவர்களும், அடிக்கடி லாங் டிரிப் அடிக்க விரும்புபவர்களும் தேர்வு செய்வது எஸ்யூவி கார்களைதான். இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தற்போது, எஸ்யூவி கார்களுக்கு ரூ.8 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எஸ்யூவி கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி குறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாங்யாங் ரெக்ஸ்டான் (Ssangyong Rexton)
ரூ.8 லட்சம் தள்ளுபடி
பிரீமியம் எஸ்யூவி கார்களில் ஒன்று சாங்யாங் ரெக்ஸ்டான். இந்தியாவில் மஹிந்திரா டீலர்ஷிப்கள் மூலம் ரெக்ஸ்டான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதிகளவில் பிரபலம் இல்லை என்பதாலும், விலை அதிகம் என்பதாலும், குறிப்பிடத்தகுந்த அளவில் ரெக்ஸ்டான் விற்பனையாவது கிடையாது.

இந்த சூழலில் ரெக்ஸ்டான் காரின் புதிய மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. எனவே பழைய ஸ்டாக்குகளை க்ளியர் செய்ய வேண்டும் என்பதற்காக, ரெக்ஸ்டான் காருக்கு 8 லட்ச ரூபாய் என்ற மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா பிஆர்-வி (Honda BR-V)
ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி
ஜப்பான் நிறுவனமான ஹோண்டா வழங்கும் 7 சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்தான் பிஆர்-வி. இந்த காருக்கு ஹோண்டா நிறுவனம், எக்ஸ்சேஞ்ச் பலன் 65 ஆயிரம் ரூபாய் உள்பட மொத்தமாக 1 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது.

ஹோண்டா பிஆர்-வி காரானது, ஹோண்டா சிட்டி காருடன் ஒரே இன்டீரியரை பகிர்ந்து கொண்டுள்ளது. மார்க்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ரெனால்ட் டஸ்ட்டர் உள்ளிட்ட கார்களுடன், ஹோண்டா பிஆர்-வி கார் போட்டியிடுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 (Mahindra XUV500)
ரூ.1 லட்சம் தள்ளுபடி
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் பிரீமியமான மற்றும் வேகமான எஸ்யூவி கார்களில் ஒன்று எக்ஸ்யூவி 500. சன்ரூஃப், டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் என பல்வேறு பிரீமியம் வசதிகள், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரில் இடம்பெற்றுள்ளன.

பெரும்பாலான மஹிந்திரா மாடல்களில் இது போன்ற வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், எக்ஸ்யூவி 500 காரின் ப்ரீ-ஃபேஸ்லிப்ட் மாடலுக்கு மஹிந்திரா நிறுவனம் 1 லட்ச ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. என்றாலும் ஏடி வேரியண்ட்களுக்கு எவ்வித தள்ளுபடியும் கிடையாது.

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)
ரூ.70 ஆயிரம் தள்ளுபடி
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி கார்களில் ஒன்று ஸ்கார்பியோ. 4X2 மற்றும் 4X4 டிரைவ் சிஸ்டங்களுடன் ஸ்கார்பியோ விற்பனை செய்யப்படுகிறது. ஸ்கார்பியோ காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் மஹிந்திரா நிறுவனம் 70 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் பெரும்பாலான வேரியண்ட்களில் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் பேஸ் மாடல் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் பேஸ் மாடல், 2.5 லிட்டர் M2DICR மோட்டாரை பெற்றுள்ளது.

மஹிந்திரா டியூவி 300, டியூவி 300 ப்ளஸ் (Mahindra TUV300, TUV300 Plus)
ரூ.65 ஆயிரம் தள்ளுபடி
காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில், டியூவி 300 கார்களின் விற்பனை சிறப்பாகவே உள்ளது. டியூவி 300 காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும், டியூவி 300 ப்ளஸ் காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது டியூவி இரட்டையர்களுக்கு மஹிந்திரா நிறுவனம், 65 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.

நிஸான் டெரானோ (Nissan Terrano)
ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி
பெட்ரோல், டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் நிஸான் டெரானோ விற்பனை செய்யப்படுகிறது. இதில், டீசல் இன்ஜின் ஏஎம்டி ஆப்ஷனையும் பெற்றுள்ளது. டெரானோ காரின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்பட 75 ஆயிரம் ரூபாய் வரை நிஸான் தள்ளுபடி வழங்குகிறது.

டாடா ஹெக்ஸா (Tata Hexa)
ரூ.70 ஆயிரம் தள்ளுபடி
மிகவும் பிரீமியமான 7 சீட்டர் எஸ்யூவி கார்தான் டாடா ஹெக்ஸா. லக்ஸரி க்ராஸ்ஓவர் காரான இதில், JBL 16-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் மற்றும் Mood Ambience Lighting உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. டாடா நிறுவனம் இந்த காருக்கு 70 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்...


Click it and Unblock the Notifications