அமிதாப் முதல் ஷாருக் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

அமிதாப் பச்சன் முதல் ஷாருக்கான் வரை பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் கார்களையே பயன்படுத்தி வருகின்றனர். யார் யாரிடம் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன? என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

By Arun

அமிதாப் பச்சன் முதல் ஷாருக்கான் வரை பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் கார்களையே பயன்படுத்தி வருகின்றனர். யார் யாரிடம் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன? அதற்கான காரணம் என்ன? அந்த காரின் சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

ரன்பீர் கபூர்

மிகவும் பிரபலமான இளம் நடிகரான ரன்பீர் கபூர் ரேஞ்ச் ரோவர் வோக் காரை வைத்துள்ளார். இதுதவிர லாஸ்ட் ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரும் அவரிடம் உள்ளது. ஆனால் இந்த 2 கார்களில், ரேஞ்ச் ரோவர் வோக்தான் மிகவும் லக்ஸரியானது. இதன் விலை ரூ.1.6 கோடிக்கும் மேல்.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

இந்த காரில் 3.0 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 600 என்எம் டார்க் திறனுடன் இணைந்து அதிகபட்சமாக 250 பிஎச்பி பவரை வழங்கவல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த கார் வந்துள்ளது. ரேஞ்ச் ரோவர் வோக் கார் ஃபுல் டைம் AWD சிஸ்டமை வழங்குகிறது.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

ஷாருக்கான்

பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கான் பல ஹை எண்ட் கார்களை வைத்துள்ளார். எனினும் சமீபத்தில் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி காரை அவர் வாங்கியுள்ளார். இந்த காரை தனது தினசரி பயன்பாட்டிற்கு ஷாருக்கான் பயன்படுத்தி வருகிறார்.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

இந்த கார் தற்போது இந்தியாவில் 2 பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2 டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஆனால் ஷாருக்கானிடம் உள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

கரீனா கபூர்

ரேஞ்ச் ரோவர் வோக் காரின் முந்தைய ஜென்ரேஷன், கரினா கபூரிடம் உள்ளது. பல நிகழச்சிகளுக்கு கரினா கபூர் இந்த காரில் வந்து சென்றுள்ளார். இதுதவிர லெக்ஸஸ் எல்எக்ஸ் 470 உள்ளிட்ட ஹை எண்ட் கார்களை கரீனா கபூர் வைத்துள்ளார்.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

ஜாக்குலின் பெர்ணாண்டஸ்

ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார் வைத்திருக்கும் மற்றொரு வளர்ந்து வரும் பாலிவுட் நட்சத்திரம் ஜாக்குலின் பெர்ணாண்டஸ். அவரிடம் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் வோக் கார் உள்ளது. இந்த காருடன் ஸ்போர்ட்டி பாடி கிட் பொருத்தப்பட்டுள்ளது.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

இதன்மூலம் ரெகுலர் வெர்ஷனுடன் ஒப்பிடுகையில், அவரது கார் இன்னும் ஸ்போர்ட்டியாக தெரியும். இது முந்தைய ஜென்ரேஷன் கார்தான். ஆனால் லக்ஸரி, சௌகரியும் ஆகியவற்றுக்கு எந்த குறைச்சலும் அந்த காரில் இல்லை.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

அனுஷ்கா சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நட்சத்திரமுமான அனுஷ்கா சர்மாவிடம் உள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி மிகவும் லக்ஸரியானது. எஸ்யூவிக்களின் ரோல்ஸ் ராய்ஸ் என அறியப்படும் கார் அது. இந்த காரின் விலை ரூ.2 கோடிக்கு மேல் இருந்துதான் தொடங்குகிறது.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

அலியா பட்

இளம் பாலிவுட் நடிகையான அலியா பட்டிடம் ரேஞ்ச் ரோவர் வோக் கார் உள்ளது. இந்த காரின் விலை ரூ.1.6 கோடி. இதில் பொருத்தப்பட்டுள்ள வி6 இன்ஜின் அதிகபட்சமாக 240 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன், ஃபுல் டைம் AWD சிஸ்டமும் இந்த கார் வந்துள்ளது. அலியா பட்டின் விருப்பமான கார் இதுவாகதான் இருக்கும். ஏனெனில் இந்த காரில்தான் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர் வந்து சென்று கொண்டிருக்கிறார்.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

துஷார் கபூர்

வெள்ளை பெயிண்ட் ஷேடு கொண்ட ரேஞ்ச் ரோவர் வோக் காரை துஷார் கபூர் வைத்திருக்கிறார். இந்த காரில் 3.0 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 240 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி சீறிப்பாயும்.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

பாபி தியோல்

பாலிவுட் நடிகர் பாபி தியோல், லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை, ரூ.1.2 கோடிக்கு சமீபத்தில்தான் வாங்கினார். இதுதவிர அவரது கேரேஜில், லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் வோக், லேண்ட் ரோவர் ப்ரீலேண்டர்-2 மற்றும் போர்ஸே காயன்னே பல கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கனிடம் ரேஞ்ச் ரோவர் வோக் கார் உள்ளது. இதுதவிர நடிகை மலாய்கா அரோரா கான் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வைத்துள்ளார். இப்படி பாலிவுட் நட்சத்திரங்கள் பலரின் கேரேஜ்களிலும் ரேஞ்ச் ரோவர் கார்கள் நிரம்பி வழிகின்றன.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

ஏனெனில் ரேஞ்ச் ரோவர் கார்கள், பெர்மார்மென்ஸ் மற்றும் லக்ஸரி என இரண்டையும் கலந்து கட்டி வழங்குகின்றன. இதனால்தான் பாலிவுட் நட்சத்திரங்களின் ஃபேவரைட் காராக அது திகழ்கிறது. அத்துடன் அவர்களின் அந்தஸ்தை வெளிக்காட்டும் ஒரு அம்சமாகவும் ரேஞ்ச் ரோவர் பார்க்கப்படுகிறது.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

அமிதாப் பச்சன்

இவர்களிடம் எல்லாம் ரேஞ்ச் ரோவர் கார் இருக்கும்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம் மட்டும் இல்லாமல் இருக்குமா என்ன? ரேஞ்ச் ரோவர் மீதான காதலுக்கு அமிதாப் பச்சனும் விதிவிலக்கல்ல. அவரிடம் ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராபி எல்டபிள்யூபி கார் இருக்கிறது.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

அமிதாப் ஜியின் ஆட்டோபயோகிராபி எல்டபிள்யூபி 4 வீல் டிரைவ் கொண்ட எஸ்யூவி கார். இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 4.4 லிட்டர் வி8 டீசல் இன்ஜின், 3,000 ஆர்பிஎம்மில் 335 பிஎச்பி பவரையும், 1,750-2,250 ஆர்பிஎம்மில் 750 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடிய சக்தி வாய்ந்தது.

அமிதாப் முதல் ரன்பீர் வரை... ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு பாலிவுட் மயங்குவது இதனால்தான்...

இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 218 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் எட்டி விடும். இந்த காரின் இன்டீரியர்கள் அமிதாப் பச்சனின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

Source: Cartoq

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Many famous Bollywood actors own a Range Rover SUV -Why. Read in tamil
Story first published: Saturday, June 30, 2018, 12:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X