பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!

Written By:

பவர்ஃபுல் டீசல் எஞ்சின் மற்றும் புதிய பொலிவுடன் மாருதி பலேனோ கார் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கார் குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!

கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பலேனோ கார் வாடிக்கையாளர்களின் சிறப்பான தேர்வாக மாறியதுடன், விற்பனையிலும் சக்கை போடு போட்டு வருகிறது. மாருதி நிறுவனத்தின் விற்பனையிலும் முக்கிய மாடலாக விளங்குகிறது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!

இந்த நிலையில், நேர் போட்டியாளரான ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அண்மையில் புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வந்தது. இதனால், மாருதி பலேனோவுக்கு சற்றே நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!

இதனை போக்கிக் கொள்ளும் விதத்தில் பலேனோ காரை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மாருதி பலேனோ காரின் தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதுடன், சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாகவும் டீம் பிஎச்பி தளத்தில் வெளியான தகவல் கூறுகிறது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!

தற்போது மாருதி பலேனோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!

இந்த நிலையில், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக அதிக திறன் வாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பலேனோ காரில் பொருத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த எஞ்சின் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!

இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரம் கொண்டதாக இருக்கும் என்பது தெரிகிறது. புதுப்பொலிவுடன் வர இருக்கும் மாருதி சியாஸ் மற்றும் மாருதி எர்டிகா கார்களிலும் இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!

இந்த நிலையில், புதிய மாருதி பலேனோ காரின் உற்பத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Maruti Suzuki launched the Baleno premium hatchback in India in October 2015 and since its launch, the hatchback has been selling like hot cakes in the country. Now, a report from TeamBHP reveals more details about the Baleno facelift.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark