மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி பெலினோ காரில் சைடு ஸ்கர்ட், கருப்பு வண்ண விசேஷ இருக்கை உறைகள், சில் கார்டு, 3டி மிதியடி, ஸ்மார்ட் கீ ஃபைண்டர், நெக்ஸா கீ ரிங், டிஸ்யூ பேப்பருக்கான பெட்டி மற்றும் தரம

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

இந்த ஸ்பெஷல் மாருதி பெலினோ காரில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் விசேஷ பாடி கிட்டும் கொடுக்கப்படுகிறது. இந்த காரின் முன்புறம், பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் ஸ்கர்ட் எனப்படும் விசேஷ பிளாஸ்ட்டிக் சட்டம் பொருத்தப்பட்டுள்ளன. இது காரின் வசீகரத்தை கூட்டுகிறது.

மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

இந்த காரின் உட்புறத்தில் கருப்பு வண்ண விசேஷ இருக்கை உறைகள், ஒளி உமிழ் பின்னணியுடன் தெரியும் எழுத்துக்களுடன் கூடிய சில் கார்டு, 3டி மிதியடி, ஸ்மார்ட் கீ ஃபைண்டர், நெக்ஸா கீ ரிங், டிஸ்யூ பேப்பருக்கான பெட்டி மற்றும் தரமான குஷன்கள் ஆகியவை கூடுதல் ஆக்சஸெரீகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடலுக்கான விலை விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், ரூ.30,000 கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இது நிச்சயம் கூடுதல் மதிப்பையும், தனித்துவத்தையும் வழங்கும்.

மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

இதுதவிர்த்து, எஞ்சின் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. பெட்ரோல் மாடலில் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும் எஞ்சினும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

பெட்ரோல் மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டீசல் மாடலானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி பெலினோ கார் கிடைக்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதல் ஆக்சஸெரீகளுடன் இந்த கார் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி பெலினோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

மாருதி பெலினோ ஆர்எஸ் மாடலானது அதிக சக்திவாய்ந்த மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் ஸ்பெஷல் பாடி கிட் கொண்டதாக கிடைக்கிறது. மேலும், இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 25, 2018, 13:15 [IST]
English summary
Maruti Baleno Limited Edition launched in India: Maruti Suzuki has launched the new Baleno Limited Edition ahead of the festive season. The Maruti Baleno Limited Edition is equipped with new features and also gets a sporty body kit. Previously, Maruti Suzuki had also introduced the Ignis Limited Edition.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+