ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

பல வருடங்களாக நம் இந்திய பொருளாதாரத்திற்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்றவாறு தனது வாகனங்களை செம்மனே உருவாக்கி விற்பனையில் விண்ணளவு உயரத்தை எட்டியது மாருதி சுசூகி நிறுவனம். தற்போது இந்திய சந்தையில் 3.6 லட்சம் ஆட்டோமேட்டிக் ரக கார்களை விற்பனை செய்து மிரவைத்துள்ளது . இது பற்றிய மேலும் சிலிர்ப்பூட்டும் தகவலை காண்போம் வாரீர்.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

வாகன துறையில் இந்தியாவின் முன்னோடியாக இருந்த மாருதி சுசூகி தற்போது ஆட்டோமேட்டிக் வாகன துறையில் முன்னோடி என்று கூறுவதில் பெருமை கொள்கிறது. இந்த நிறுவனம் மாதா மாதம் வருடா வருடம் விற்பனை புள்ளியில் வளர்ந்து கொண்டே செல்கிறது என்பது இதன் தரத்தை நிலைநாட்டும் வகையில் உள்ளது. இதன் காரணமாகவே இதை இந்தியசந்தையின் முன்னோடி என்கிறோம் .

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

ஒட்டுமொத்த நிறுவன அடிப்படையில்லாமல் தனியாக ஒரு குறிப்பிட்ட வாகனத்தை மட்டும் நோக்குவீராயின் அதிலும் முன்னின்று மீசை முறுக்குவது மாருதி சுசூகி வாகனங்களே. ஆம் இந்தியாவின் தலை சிறந்த வாகன பட்டியலில் முதல் மூன்று இடத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளது மாருதி சுசூகி.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

இதன் தீர்வாகவே மாருதி சுசூகி நிறுவனம் பிற நிறுவனங்களை பின் தொடர செய்வது ஆச்சர்யமளிக்கும் உண்மை. நகரங்களில் மட்டுமல்லாமல் பாமர மக்கள் மத்தியில் கிராம புறங்களிலும் தன் எளிமைத்தனத்தை வெளிப்படுத்தி அனைவர் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நிறுவனம் என்றாயிற்று.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, மாருதி கார் நிறுவனம் 3.6 லட்சம் ஆட்டோமேட்டிக் கார்களை நான்கே வருடங்களில் விற்று இமாலய சாதனை படைத்துள்ளது. தன்னுடைய ஆட்டோமேட்டிக் வாகனங்களான பலேனோ, சியாஸ் போன்றவற்றை விட AMT தொழில்நுட்பத்தில் இயங்கும் பழைய வாகனங்கள் 10 சதவிகிதம் முன்னிலையில் உள்ளது.

Most Read Article:ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்!

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

ஆம். மாருதி சுஸுகியின் பலேனோ மற்றும் சியாஸ் போன்ற ஆட்டோமேட்டிக் வாகனங்கள் கார்கள் CVT அதாவது (CONVENTIONAL TORQUE CONVERTOR ) தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. மாருதி சுஸுகியின் மொத விற்பனை பட்டியலை நோக்குகையில் முப்பது சதவிகித வெற்றி AMT பொருத்தப்பட்ட வாகனத்தையே சாரும்.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

2014 இல் வெளியான AMT தொழில்நுட்பம் கொண்ட செலெரியோ AMT என்ற கார் இந்த பெயரை பெற்று தந்துள்ளது . இதன் காரணம் AMT தொழில்நுட்பம் கொண்ட எந்த வாகனமும் இவ்வளவு திறனுடன் வியப்பூட்டும் விலைக்கு கிடைப்பதில்லை. இதையே மிக குறைந்த விலையில் வாகனங்களை சந்தையிட்டு இவர்கள் எப்படி லாபம் காண்கிறார்கள் என்று மற்ற நிறுவனங்கள் உற்று நோக்குகின்றனர்.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

AMT தொழில்நுற்பதில் இயங்கும் இன்ன பிற வாகனங்கள் யாதெனில் நியூ ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரீசா போன்றவை. இவற்றை AUTO GEAR SHIFT வாகனம் என்றும் அழைக்கின்றனர் . மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் அனுபவம், சத்தமற்று கிடைக்கும் கியர் மாற்றங்கள், குறைந்த விலை, நிறைந்த மைலேஜ் போன்றவை பக்க பலமாய் நின்று வெற்றிக்கனியை அசை போட்டு கொண்டிருக்கின்றது.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

முன்பு அடிகொட்டிட்ட வாறு இந்தியா தானியங்கி சந்தையின் முன்னோடியான மாருதி சுசூகி தனது AMT வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முறை வாகனங்கள் என விருப்பத்திற்கேற்ப வழங்க வல்லது. ஏழு தரப்பட்ட வாகனம் AMT தொழில்நுட்பத்தில் சந்தையில் உள்ளது. அவற்றில் ஸ்விப்ட் டிசையர் தான் முன்னோடி என்றால் மிகையாகாது.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

இதன் வெற்றியை உடைக்கும் விதமாக AMT தொழில்நுட்பத்தில் வெளிவந்த ரெனோ கிவிட், டாடா நெக்சான் போன்றவை ஓரளவு விற்பனையை எட்டினாலும் மாருதி சுஸுகியை தூக்கியெறிய புதிய வாகனம் பிறந்ததுதான் வரவேண்டும்.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

இந்திய வாகன உரிமையாளர்களில் அதிகமானோர் தங்கள் நேரத்தை போக்குவரத்து நெரிசலில் வீண் விரயம் செய்து கொண்டு இருக்கின்றனர் என்கிறது ஆய்வு. இவர்களுக்கு பரிசாக ஆட்டோமேட்டிக் வாகனங்களை அளித்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம்.

ஆட்டோமேட்டிக் கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசூகி !!

அதாவது போக்குவரத்து நெரிசல் நேரங்களில் பிரேக் ஐ மட்டும் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்த முயன்றால் போதும் மற்ற தேவைகளை தானாக அவை முன்னின்று பார்த்துக்கொள்ளும். நமக்கு தேவையற்ற எரிச்சல்கள் இன்னல்கள் இல்லை. ஏற்கனவே மாருதி சுசூகி நல்லதொரு பெயரை தானியங்கி துறை பொரித்துள்ள காரணத்தால் அதன் ஆட்டோமேட்டிக் வாகனங்கள் அதிக விளம்பரத்தன்மையை நம்பி இல்லாது விற்பனை சாதனை படைக்கிறது என்பதே உண்மை.

{document1}

Tamil
English summary
Maruti has become the largest seller of automatic cars in India is not that surprising. The Indian car market is witnessing a growing demand for affordable automatic cars, especially in urban areas.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more